உலகக்கிண்ண கனவை இழந்தது தென்னாபிரிக்கா


prv_1561336525

இங்கிலாந்தில் நடைபெறும் உலகக்கிண்ண போட்டித்தொடரின் அரையிறுதி போட்டிகளுக்கு முன்னேறும் வாய்ப்பை பிரபல தென்னாபிரிக்க அணி இழந்துள்ளது.

உலகக்கிண்ண போட்டித்தொடரின் 30வது போட்டி நேற்று பாகிஸ்தான் மற்றும் தென்னாபிரிக்க அணிகளுக்கிடையில் லோர்ட்ஸ் மைதானத்தில் இடம்பெற்றது.

போட்டியின் நாணயச்சுழற்சியில் வெற்றிபெற்ற பாகிஸ்தான் அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது.

அதன்படி அதிரடியாக துடுப்பெடுத்தாடிய பாகிஸ்தான் வீரர்கள் நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 7 விக்கெட் இழப்பிற்கு 308 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.

பாகிஸ்தான் சார்பகாக ஹரிஸ் சொஹைல் 89 ஓட்டங்களையும் பாபர் அஸாம் 69 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்தனர்.

பந்துவீச்சில் லுங்கி என்கிடி 3 விக்கெட்டுக்களையும் இம்ரான் தாஹிர் 2 விக்கெட்டுக்களையும் கைப்பற்றினர்.

309 என்ற வெற்றி இலக்குடன் பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய தென்னாபிரிக்க அணி 50 ஓவர்கள் நிறைவில் 9 விக்கெட் இழப்பிற்கு 259 ஓட்டங்களை மாத்திரமே பெற்றுக்கொண்டது.

அதன்படி பாகிஸ்தான் அணி 49 ஓட்டங்களால் வெற்றி பெற்றது.

அதேவேளை இந்த போட்டியில் தோல்வியை சந்தித்த தென்னாபிரிக்கா அணி அரையிறுதிக்கு முன்னேறும் தமது கனவை முற்றாக இழந்துள்ளது.

இதுவரை 7 போட்டிகளில் விளையாடியுள்ள தென்னாப்பிரிக்கா 1 போட்டியில் வெற்றி பெற்றுள்ளதுடன் 5 போட்டிகளில் தோலிவியடைந்துள்ளது. ஒரு போட்டி மழை காரணமாக கைவிடப்பட்டுள்ளது.

அதன்படி ஆப்கானிஸ்தானுக்கு பின்னர் உலகக்கிண்ண தொடரிலிருந்து வெளியேறும் இரண்டாவது அணியாக தென்னாபிரிக்கா மாறியுள்ளது.

தொடருக்கு முன்னர் மிகச்சிறந்த சகலதுறை அணியாக அனைவராலும் கருதப்பட்ட தென்னாபிரிக்கா முதல் சுற்றுடன் வெளியேறுவது கிரிக்கெட் இரசிகர்களுக்கு மத்தியில் கவலையையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.(அ)

One comment

  1. Only one team can win…..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>