உளவு விமான தாக்குதலுக்கு அமெரிக்கா பதிலடி


cyber attack

உளவு விமானத்தை சுட்டு வீழ்த்தியதற்கு பதிலடியாக ஈரான் இராணுவ கம்ப்யூட்டர் அமைப்பின் மீது அமெரிக்கா சைபர் தாக்குதல் நடத்தியிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஈரானுடன் கடந்த 2015 இல் செய்து கொண்ட அணு ஆயுத ஒப்பந்தத்தில் இருந்து அமெரிக்கா கடந்த ஆண்டு விலகியது. இதிலிருந்தே இரு நாடுகளுக்கும் இடையே பதற்றமான சூழல் நிலவுகிறது. ஈரான் மீது பல்வேறு பொருளாதார தடைகளை அமெரிக்கா விதித்தது.

ஈரானிடமிருந்து மசகு எண்ணெய் இறக்குமதி செய்யும் மற்ற நாடுகள் மீதும் தடை விதிப்பதாக அமெரிக்கா எச்சரித்திருந்தது.

இதற்கிடையே, கடந்த சில நாட்களுக்கு முன் தங்கள் நாட்டு வான்வெளியில் அத்துமீறி நுழைந்ததாக தெரிவித்து, அமெரிக்க உளவு விமானத்தை ஈரான் இராணுவம் சுட்டு வீழ்த்தியது. இதனால் ஆத்திரமடைந்த அமெரிக்க இராணுவம் பதில் தாக்குதலுக்கு தயாரானதால் பதற்றம் ஏற்பட்டிருந்ததாக சர்வதேச செய்திகள் சுட்டிக்காட்டியிருந்தன.

இந்த நிலையிலேயே, ஈரான் இராணுவ கம்ப்யூட்டர் அமைப்பின் மீது கடந்த வியாழக்கிழமை அமெரிக்க இராணுவ சைபர் தாக்குதல் நடத்தியிருப்பதாக தற்போது தகவல்கள் வெளியாகி உள்ளன.

இத்தாக்குதல் குறித்து  அமெரிக்க உத்தியோகப் பற்றற்ற தகவல்கள் தெரிவித்துள்ளதாவது,

‘‘ஏவுகணை மற்றும் ரொக்கெட்  என்பவற்றைக் கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் ஈரான் இராணுவ கம்ப்யூட்டர் அமைப்பின் மீது சைபர் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இதில் அந்த அமைப்புக்கு பாரிய சேதம் ஏற்பட்டுள்ளது. இத்திட்டம் அதிபர் டிரம்ப்பிடம் ஒப்புதல் பெறப்பட்ட பிறகே நடத்தப்பட்டுள்ளது. இதற்காக கடந்த சில வாரங்கள் திட்டமிடப்பட்டது’’ எனக் கூறப்பட்டுள்ளது.

அமெரிக்காவின் சைபர் தாக்குதல் தொடர்பாக ஈரான் தரப்பில் இதுவரை எந்த பதிலும் அளிக்கப்படவில்லையென குறிப்பிடப்பட்டுள்ளது.   (மு)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>