நெதர்லாந்தில் நான்கு மணி நேரம் தொலைத்தொடர்பு துண்டிப்பு


_107524868_hi053576990

நெதர்லாந்து நாட்டில் நான்கு மணி நேரமாகத் தொலைத்தொடர்பு திடீர் என துண்டிக்கப்பட்டதாகச் சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

முதலில் நெதர்லாந்து பொதுத்துறை நிறுவனமான ராயல் கேபிஎன் சேவை செயலிழந்தது. அதன் பிறகு இதனுடன் தொடர்புடைய மற்ற நிறுவனங்களின் சேவையும் துண்டிக்கப்பட்டது. இதற்கான காரணம் இன்னும் தெரியவரவில்லை என அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அதேவேளை நெட்வொர்க் ஹேக் செய்யப்பட்டதற்கான தடயங்களும் கிடைக்கப்பெறவில்லை எனவும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

தொலைத்தொடர்பு சேவை துண்டிக்கப்பட்டதும், அதிகளவில் பொலிஸார் வீதிகளில் குவிக்கப்பட்டனர். அவசர தேவைக்குத் தொலைத்தொடர்பைச் சார்ந்து இருக்காமல் நேரடியாக பொலிஸ் நிலையம், மருத்துவமனைக்குச் செல்ல பொதுமக்களை அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர். (ஸ)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>