முஸ்லிம்களுக்கு எதிரான நடவடிக்கைகள் முடிவுக்குக் கொண்டுவரப்பட வேண்டும் – HRW


meenakshi ganguly

முஸ்லிம்களுக்கு எதிரான தன்னிச்சையான கைதுகள் மற்றும் பிற முறைகேடுகளை முடிவுக்குக் கொண்டுவர வேண்டும் எனச் சர்வதேச மனித உரிமை கண்காணிப்பகம் இலங்கை அரசாங்கத்திடம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

உயிர்த்த ஞாயிறு தாக்குதலிற்குக் காரணமானவர்களை நீதி விசாரணைக்கு உட்படுத்தவேண்டிய அவசியம் காணப்படும் அதேவேளை, பிரஜைகளைப் பாதுகாக்கவேண்டிய தேவையும் அரசாங்கத்துக்கு உள்ளது என்றும் மனித உரிமை கண்காணிப்பகத்தின் தெற்காசியாவிற்கான இயக்குநர் மீனாட்சி கங்குலி தெரிவித்துள்ளார்.

“முஸ்லிம்களுக்கு எதிராக இடம்பெறும் கும்பல்களின் வன்முறைகள் அந்த சமூகத்தினரிற்கு எதிரான அச்சுறுத்தல்கள் ஒடுக்குமுறைகளுக்கு அதிகாரிகள் துரிதமாக முடிவைக் காணவேண்டியது அவசியம். உயிர்த்த ஞாயிறு குண்டு வெடிப்புகளின் பின்னர் அதிகாரிகள் நூற்றுக்கும் மேற்பட்டவர்களைக் கண்மூடித்தனமாகக் கைது செய்து பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் தடுத்துவைத்துள்ளனர். குறிப்பாக அரசாங்கம் தான் நீக்குவதாக ஐ.நா. மனித உரிமை பேரவைக்கு வாக்குறுதியளித்த பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழேயே பெரும்பாலானவர்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.

பயங்கரவாத நடவடிக்கைகளில் ஈடுபட்டனர் என்பதற்கான ஆதாரங்கள் எதுவுமற்ற நிலையில் பலர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். தேடுதல் நடவடிக்கையின் போது குர்ஆனை வைத்திருந்தமைக்காகவும் பலர் கைதுசெய்யப்பட்டுள்ளனர் எனச் சட்டத்தரணிகள் தெரிவித்துள்ளனர்.

இலங்கை அரசாங்கம் ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவைக்கு அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றுவதே நீண்ட கால அளவில் மனித உரிமை துஷ்பிரயோகங்களை முடிவிற்குக் கொண்டுவருவது அவசியம். பல இலங்கையர்கள் அனுபவித்த இன வன்முறையும் மனித உரிமை மீறல்களும் தற்போது முஸ்லிம்களுக்கு எதிராகக் கட்டவிழ்த்துவிடப்படுகின்றன” என மீனாட்சி கங்குலி மேலும் தெரிவித்துள்ளார்.

9 comments

 1. வெறுமனே வாய்ச்சொல்லில் இல்லாமல் செயல்பட வேண்டும். இலங்கையில்இன்னுமொரு தமிழ் பேசும் இனம் அழிக்கப்படுவதை பார்த்துக் கொண்டிருக்கக் கூடாது

 2. ஓம் நீங்கள் சொல்வது உண்மை செயல் படுத்த பட வேண்டும்

 3. Thanks Madame for your support

 4. தமிழ் பேசும் மக்களுக்கு தாய் நாட்டில் திட்டமிட்டு நடத்தும் சதி

 5. என்ன செய்வது நாய்கூன்டில் அடைபட்டு கிடந்தவனை அரசாங்கம் வெளியேற்றி விட்டு அவன் ஊளையிட்டு திரிவதை அரசாங்கம் வேடிக்கை பார்க்கின்றது.

 6. இலங்கையில் நடப்பது அரசியல் அத்து மீறல்கள்.இலங்கை அரசு ஐ.நா வுக்கும்,ஐ.நா.மனித உரிமை மீறல் கவுன்சிலுக்கும் தமிர் பிரச்சினை முதல் முஸ்லீம்களின் பிரச்சினை வரை எத்தனையோ வாக்குறுதிகளை கொடுத்துள்ளது.ஆனால் ஒன்றும் நிறைவேற்ற வில்லை.

 7. We r with u mam.

 8. இஸ்லாமிய தீவிரவாதிகளிடம் இருந்து இலங்கையை காப்பாற்றுங்கள்.

 9. Mohamed Jaya Mohamd Cassim

  Thank you madam

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>