இம்தியாஸ் பாக்கீர் மாக்கார் – முன்னாள் துருக்கி பிரதமர் சந்திப்பு


IBM and AD

முன்னாள் அமைச்சரும், தேசிய ஒற்றுமைக்கான பாக்கீர் மாக்கார் அமைப்பின் தலைவருமான இம்தியாஸ் பாக்கீர் மாக்கார் மற்றும் துருக்கி நாட்டின் முன்னாள் பிரதமர் அஹ்மட் தாவுத்ஒக்லு ஆகியோருக்கிடையிலான சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.

முன்னாள் அமைச்சர் இம்தியாஸ் பாக்கீர் மாக்காரின் துருக்கிக்கான பிரத்தியேக விஜயமொன்றின் போதே இஸ்தான்புல் நகரில் இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது.

குறித்த சந்திப்பில் இரு நாடுகள் முகம்கொடுத்துள்ள பிரச்சினைகள் மற்றும் சர்வதேச அபிவிருத்தி தொடர்பில் சிநேகபூர்வமான கலந்துரையாடல் இடம்பெறுள்ளது.

இச்சந்திப்பில் முன்னாள் அமைச்சர் இம்தியாஸ் பாக்கீர் மாக்கார் மற்றும் துருக்கி நாட்டின் முன்னாள் பிரதமர் அஹ்மட் தாவுத்ஒக்லு ஆகியோரின் துணைவியர்களும் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.(அ)
IBM and AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>