சோபாவின் மூலம் அமெரிக்க இராணுவம் எந்தநேரத்திலும் நாட்டில் நடமாடலாம்- இ.ச.ச.


59ca9a5ea-1

அமெரிக்காவுடன் ‘‘சோபா” உடன்படிக்கையில் கைச்சாத்திடுவதன் ஊடாக 2.9 மில்லியன் அமெரிக்க இராணுவத்துக்கு எந்தவொரு நேரத்திலும் இலங்கைக்குள் பிரவேசிக்க முடியுமான ஒரு நிலைமை உருவாக்கும் என இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவர் ஜனாதிபதி சட்டத்தரணி காலிங்க இந்ததிஸ்ஸ தெரிவித்தார்.

தற்போதைய அரசாங்கம் அமெரிக்காவுடன் கைச்சாத்திட தயாராகும் சோபா, அக்சா மற்றும் மிலேனியம் கோபர்சன் ஆகிய உடன்படிக்கைகள் தொடர்பில் அறிவுறுத்தும் வகையில் எதிர்க் கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஸவுடன் நேற்று (05) இடம்பெற்ற கலந்துரையாடலின் போது அவர் இதனைக் கூறினார்.

பயங்கரவாதிகளும் இந்நாட்டில் சுதந்திரமாக செயற்படக் கூடிய வாய்ப்புக்கள் உருவாகும் எனவும் அவர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.

அத்துடன், இந்த சோபா உடன்படிக்கையில் அரசாங்கம் கைச்சாத்திட்டால், அமெரிக்க இராணுவத்தினரும் சீருடையில் ஆயுதத்துடன் நாட்டிற்குள் நடமாடும் நிலைமை உருவாகும் எனவும் சுட்டிக்காட்டப்படுகின்றது.  (மு)

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>