கூட்டணிக்கு இணங்காவிட்டால் சுதந்திர கட்சி தனித்து செயற்படும் – மஹிந்த


M Amara-01

புதிய கூட்டணி ஒன்றை அமைக்க ஸ்ரீலங்கா பொதுஜன பெறமுண சம்மதிக்காவிட்டால் ஜனாதிபதித்தேர்தலில் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி தனித்து போட்டியிடும் என பாராளுமன்ற உறுப்பினர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.

புதிய கூட்டணி அமைப்பதற்கு ஸ்ரீலங்கா பொதுஜன பெறமுணவுக்கு அவசியமில்லை எனின் தொடர்ந்தும் இரு தரப்புக்குமிடையிலான கலந்துரையாடல்கள் அவசியமற்றது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

மேலும் இன்னுமொரு தரப்பினரின் பின்னால் செல்ல வேண்டிய தேவை ஸ்ரீலங்கா சுதந்திர கட்சிக்கு இல்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி மற்றும் ஸ்ரீலங்கா பொதுஜன பெறமுண இணைந்து ஸ்ரீலங்கா நிதஹஸ் பொதுஜன பெறமுண என்ற கூட்டணியை அமைக்க இணக்கப்பாடு எட்டப்பட்டுள்ளதாக மஹிந்த அமரவீர எம்.பி நேற்று முன்தினம் தெரிவித்திருந்தார்.

எனினும் அவ்வாறானதொரு இணக்கப்பாடு எட்டப்படவில்லை என ஸ்ரீலங்கா பொதுஜன பெறமுணவின் ஊடகவியலாளர் சந்திப்பில் பாராளுமன்ற உறுப்பினர் ஹேஷான் சேமசிங்க தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.(அ)

One comment

  1. Ethukuthaane aasappadda raaja kumaara …. semma film

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>