துறைமுகத்தை சீனாவுக்கு வழங்கியதனாலேயே, கடந்த ஏப்ரல் 21 தாக்குதல்- விஜேதாச ராஜபக்ஸ


wijedasa rajapaksa

ஹம்பாந்தோட்டை துறைமுகத்தை சீனாவுக்கு கொடுக்கும் ஒப்பந்தத்தை கைச்சாத்திட்டமையே  கடந்த ஏப்ரல் 21 தாக்குதல் இடம்பெற்றமைக்கான காரணம் எனவும், இதனை பேசுவதற்கு பலருக்கும் பயமாக இருப்பதாகவும் ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் கலாநிதி விஜேதாச ராஜபக்ஸ தெரிவித்தார்.

தேசிய வீரர் எட்வட் ஹென்ரி பேத்ரிஸின் 104 ஆவது நினைவு தின நிகழ்வு நேற்று (07) இடம்பெற்றது. இதில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையில் அவர் இதனைக் கூறினார்.

சீனாவுடன் இந்த உடன்படிக்கையை மேற்கொள்ள இந்தியா எதிர்ப்புத் தெரிவித்தது. அமெரிக்கா, ஜப்பான் என்பனவும் எதிர்ப்பு வெளியிட்டன. இதற்குக் காரணம் தெற்காசியாவின் கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த இடம் என்பதனாலாகும்.

இலங்கை காணியை வெளிநாட்டவர்களுக்கு வழங்குவது தொடர்பிலான சட்ட மூலத்தை நிறைவேற்றிக் கொண்டுள்ளதாகவும், இதற்கான ஒப்பத்தை அமைச்சர் கயந்த கருணாதிலக்கவிடம் பலவந்தப்படுத்தி பெற்றுக் கொண்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

தான் அமைச்சரவையில் இருக்கும் காலத்தில் இந்த சட்டத்தை நிறைவேற்ற இடமளிக்க வில்லையெனவும் அவர் நினைவுகூர்ந்தார்.

தற்பொழுதுள்ள எந்தவொரு தலைவர்களும் நாட்டை நேசிப்பவர்கள் அல்லர் எனவும் அவர் குறிப்பிட்டார்.  (மு)

 

 

 

 

 

 

3 comments

  1. யணசார அதிரளிய அசாத்சலி நாடகம் மகிந்த டியார்கடற் my3 பயன்னசேர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>