பதவி விலகிய முஸ்லிம் அமைச்சர்கள் நேற்றிரவு ஜனாதிபதியுடன் சந்திப்பு


Sri Lanka's Muslim cabinet members leave after addressing media in Colombo, Sri Lanka, Monday, June 3, 2019. Sri Lanka’s Muslim politicians holding top government positions have resigned enmasse saying they want to enable the government to investigate allegations against some of them on links to Islamic extremist militants. (AP Photo/Eranga Jayawardena)

பதவி விலகிய முஸ்லிம் அமைச்சர்கள் குழு நேற்றிரவு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவைச் சந்தித்து கலந்துரையாடியுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் அமீர் அலி தெரிவித்தார்.

ஜனாதிபதியிடம் சந்திப்பொன்றுக்கான நேரம் கோரியிருந்ததாகவும், அதற்கான சந்தர்ப்பம் கிடைத்தவுடன் சிரேஸ்ட பாராளுமன்ற உறுப்பினர் ஏ.எச்.எம். பௌசியின் தலைமையில் இந்த சந்திப்பு இடம்பெற்றதாகவும் அவர் குறிப்பிட்டார்.

சாட்சிகள் எதுவும் இல்லாத நிலையில் கைது செய்யப்பட்டு, சிறையில் வைக்கப்பட்டுள்ள முஸ்லிம்களை விடுதலை செய்வது குறித்து ஜனாதிபதிக்கு எடுத்துக் கூறப்பட்டதாகவும், ஜனாதிபதி அது குறித்து நடவடிக்கை எடுப்பதாக வாக்குறுதியளித்ததாகவும் அமீர் அலி எம்.பி. மேலும் கூறினார்.   (மு)

4 comments

  1. This is was only a mini drama

  2. This is was only a mini drama

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>