இராஜினாமா செய்ய வேண்டாம் – ஆணைக்குழு தலைவர் மஹிந்தவிடம் பிரதமர் ரணில்


1535166943-Ranil-Wickremesinghe-Vietnam-5

தேர்தல்கள் பல எதிர்வரும் மாதங்களில் நடைபெறவுள்ளதனால் இராஜினாமா செய்யாமல் இருக்குமாறு பிரதமர் ரணில் விக்ரமசிங்க தேர்தல்கள் ஆணைக்குழு தலைவர் மஹிந்த தேசப்பிரியவிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

பாராளுமன்றத்திலுள்ள பிரதமர் செயலகத்தில் வைத்து பிரதமருக்கும் தேர்தல்கள் ஆணைக்குழு தலைவருக்கும் இடையில் நேற்று (09) இடம்பெற்ற சந்திப்பின் போது இந்த வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.

தேர்தல் நடாத்தப்படாதிருந்தால் தான் இராஜினாமா செய்வதாக மஹிந்த தேசப்பிரிய இதற்கு முன்னர் பல தடவைகள் அறிவித்தல் விடுத்திருந்தார்.

மஹிந்த தேசப்பிரியவின் சேவை எதிர்வரும் தேர்தல்களின் போது அவசியம் எனவும் இதனால், அவர் இராஜினாமா செய்யக் கூடாது எனவும் பிரதமர் கேட்டுள்ளார். எதிர்வரும் நாட்களில் தேர்தலுக்குத் தயாராகுமாறும் பிரதமர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.    (மு)

 

 

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>