தயாசிறி எம்.பி. இரண்டாவது தடவையாக இன்றும் தெரிவுக்குழுவுக்கு அழைப்பு


83183_dayasiri-jayasekara--new

கடந்த ஏப்ரல் 21 ஆம் திகதி இடம்பெற்ற பயங்கரவாத தாக்குதல் தொடர்பில் விசாரணை மேற்கொள்ள நியமிக்கப்பட்ட பாராளுமன்றத் தெரிவுக் குழுவில் சாட்சியமளிக்க ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளர் தயாசிறி ஜயசேகர இன்று மீண்டும் அழைக்கப்பட்டுள்ளதாக தெரிவுக் குழுவின் தலைவர் ஆனந்த குமாரசிறி தெரிவித்துள்ளார்.

பாராளுமன்றத் தெரிவுக் குழு இன்று (10) பிற்பகல் 2.00 மணிக்கு கூடவுள்ளது.

ஏற்கனவே தெரிவுக் குழுவுக்கு அழைக்கப்பட்டபோதும் தயாசிறி ஜயசேகர எம்.பி. அதில் கலந்துகொள்ள மறுப்புத் தெரிவித்திருந்தார். இரண்டாவது முறை அழைப்புக்கு சபாநாயகரிடம் சிறப்புரிமை தொடர்பில் வினவியதன் பின்னர் கலந்துகொள்வதாக அறிவித்திருந்தார்.

நேற்றைய தினம் பாராளுமன்றத்தில் சபாநாயகரிடம் தான் தெரிவுக்குழுவில் கட்டாயம் சமூகமளிக்க வேண்டுமா? என தயாசிறி எம்.பி. கேட்டபோது, அதில் சமூகமளிப்பதுதான் பண்பாடான செயல் எனப் பதிலளித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.   (மு)

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>