சவுதி இளவரசியின் வழக்கு விசாரணை பிரான்சில் ஆரம்பம்


saudi arabia

மெய்க்காப்பாளரை அனுப்பி பெண் ஊழியர் ஒருவர் மீது மனிதாபிமானமற்ற முறையில் தாக்குதல் நடாத்திய குற்றச்சாட்டுக்கு உள்ளாகியுள்ள சவுதி இளவரசி ஹாசா பின்த் சல்மானின் வழக்கு விசாரணை பிரான்சின் பரிஸ் நகரில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

இளவரசி இன்றிய நிலையிலேயே இந்த விசாரணை நடாத்தப்படுவதாகவும் சர்வதேச செய்திகள் சுட்டிக்காட்டியுள்ளன.

ஊழியர் அஸ்ரப் ஈத் என்பவரே இளவரசியின் உத்தரவின் பேரில் மெய்க்காப்பாளரால் தாக்குதலுக்கு இலக்காகியுள்ளார். இளவரசியின் பிரான்சிலுள்ள சொகுசு வீட்டில் சேவையாற்றிய பெண் ஊழியரே இவ்வாறு தாக்குதலுக்கு இலக்காகியுள்ளார். இச்சம்பவம் கடந்த 2016 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் இடம்பெற்றுள்ளது.

ஹாசா பின்த் சல்மான் இளவரசி, சவுதி மன்னர் சல்மானின் மகளாவார். இவர் சவுதியின் முடிக்குரிய இளவரசர் முஹம்மத் பின் சல்மானின் அரைச் சகோதரியாவாள் எனவும் சர்வதேச ஊடகங்கள் சுட்டிக்காட்டியுள்ளன.   (மு)

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>