உலகில் அல்லாஹ்வின் பெயரிலேயே பயங்கரவாதம் உருவாகிறது- பதிலளிக்கவும் அத்துரலிய சவால்


athuraliye rathana thero

பயங்கரவாதியல்லாத இஸ்லாமிய வாதிகள் இருக்கலாம் எனவும், உலகில் பயங்கவராதிகள் உருவாவது இஸ்லாத்தினதும் அல்லாஹ்வினதும் பெயரிலேயே ஆகும் என்பதற்கு முடியுமானால் பதிலளிக்குமாறு கேட்டுக் கொள்கின்றேன் எனவும் ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் அத்துரலிய ரத்ன தேரர் பாராளுமன்றத்தில் நேற்று சவால் விடுத்தார்.

பாராளுமன்றத்தில் நேற்று (10) இடம்பெற்ற நம்பிக்கையில்லாப் பிரேரணையில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையில் அவர் இதனைக் கூறினார்.

கிழக்கு மாகாணத்தில் இன்று முஸ்லிம் பெண்களுக்கு கல்வி உரிமை தடுக்கப்பட்டுள்ளது. பெண்கள் படித்தால் துப்பாக்கிப் பிரயோகம் செய்வது யார்? நாம் அவ்வாறு செய்கின்றோமா? எனவும் தேரர் கேள்வி எழுப்பினார்.

கிழக்கு மாகாணத்தில் இன்று விளையாட்டு தடை செய்யப்பட்டுள்ளது. பெண்களுக்கு சங்கீதம், இசை தடுக்கப்பட்டுள்ளது. நடனம் தடை செய்யப்பட்டுள்ளது. இவர்கள் அடிப்படைவாதத்தையே பரப்புகின்றார்கள்.

கிழக்கிலுள்ள அதிகமான தமிழ் பாடசாலைகளில் கற்பிப்பவர்கள் முஸ்லிம் ஆசிரியர்கள். அது எவ்வாறு நிகழ்ந்தது. இங்கு பிரச்சினையொன்று உள்ளது. அது தொடர்பில் அரசாங்கம் விசாரணையொன்றை முன்னெடுக்க வேண்டும் எனவும் தேரர் கேட்டுக் கொண்டார்.   (மு)

5 comments

  1. அல்லாஹ்வின் சாபம் உண்டாகுக

  2. அழ்ழாஹ்வின் பெயரில் எவனோ ஒரு மூதேவி அப்படி செய்ததற்காக அழ்ழாஹ்வும் முஸ்லிம்களும் அதற்கு பலி கிடையாது

  3. சும்மா உருவாகுமா என்ன? அதனை உருவாக்குவதே உம்மைப்போன்ற இனவாத மூதேவிகல் தானே

  4. https://youtu.be/uqlZMUe8jQc

    👆 45 minutes
    But must watch.

    Sad & Bitter Truth 😞

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>