இராணுவ வாகனம் விபத்து, ஒருவர் பலி, 8 பேர் காயம்


Army truck 003

முல்லைத்தீவு பிரதேசத்தில் இராணுவ வீரர்கள் பயணித்த வாகனமொன்று இன்று (14) விபத்துக்குள்ளானதில் இராணுவ வீரர் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் மற்றும் எட்டுப் பேர் காயமடைந்துள்ளனர்.

விபத்தின் போது காயமடைந்தவர்கள் முல்லைத்தீவு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னரே ஒருவர் உயிரிழந்துள்ளார். காயமடைந்தவர்களில் நான்கு பேரின் நிலைமை கவலைக்கிடமானதாக காணப்படுவதாகவும் தகவல்கள் தெரிவித்துள்ளன.

விபத்துக்கான காரணம் இதுவரையில் அறியப்படவில்லையெனவும், முல்லைத்தீவு பொலிஸார் மற்றும் இராணுவத்தினர் இணைந்து சம்பவம் தொடர்பில் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாகவும் கூறப்படுகின்றது.   (மு)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>