இலங்கையில் சர்வதேச இஸ்லாமிய மாநாடு குறித்து மகாநாயக்க தேரர்களிடம் அறிவிப்பு


ajm muzammil

சர்வதேச இஸ்லாமிய மாநாட்டை இலங்கையில் நடாத்துவதற்குத் தேவையான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக மேல் மாகாண ஆளுநர் ஏ.ஜே.எம். முஸம்மில் தெரிவித்துள்ளார்.

கண்டி தலதா மாளிகைக்குச் சென்று அஸ்கிரிய மகாநாயக்க தேரர்களைச் சந்தித்த பின்னர் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கையில் இதனைக் கூறியுள்ளார்.

மகாநாயக்க தேரர்களிடம் சர்வதேச இஸ்லாமிய மாநாடு குறித்து அறிவிப்பதற்கே இன்று (14) ஆளுநர் கண்டி தலதா மாளிகைக்குச் சென்றிருந்ததாகவும் கூறப்படுகின்றது.

இம்மாதம் இறுதியில் கொழும்பில் இந்த மாநாடு நடைபெறவுள்ளதாகவும் மேல் மாகாண ஆளுநர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.   (மு)

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>