சட்டம் மூலம் கொண்டு வந்தால் அன்றைய தினத்தை துக்க தினமாக பிரகடனம் செய்வேன்- ஜனாதிபதி


maithripala sirisena president of sri lanka

மரண தண்டனை வழங்கப்படுவதை தடுக்கும் வகையில் சட்ட மூலமொன்றை பாராளுமன்றத்தில் கொண்டுவர ஏற்பாடுகள் காணப்படுவதாகவும், அவ்வாறு அந்த சட்ட மூலம் கொண்டுவரப்பட்டால் அன்றைய தினத்தை தேசிய துக்க தினமாக பிரகடனப்படுத்துவேன் எனவும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

இன்று மரண தண்டனைக்கு எதிராக பாரியளவில் கலந்துரையாடல்கள் முன்னெடுக்கப்படுகின்றன. இருப்பினும், நான் எனது போராட்டத்தைக் கைவிட மாட்டேன். போதைப் பொருள் வியாபாரிகளுக்கு எதிராக முன்னெடுக்க வேண்டிய அத்தனை நடவடிக்கைகளையும் முன்னெடுப்பேன்.

உலகில் பெரும்பாலான நாடுகளில் மரண தண்டனை உள்ளது. இந்தியாவிலும் அது நடைமுறைப்படுத்தப்படுகின்றது. அமெரிக்காவிலும் இந்த மரண தண்டனை நடைமுறையில் உள்ளது எனவும் இத்தண்டனையைக் கொடுத்தால் தான் பயம்வரும் எனவும் ஜனாதிபதி மேலும் கூறியுள்ளார்.

வலவ வலயத்தில் மஹவலி விவசாயிகளுக்கு காணி உறுதிகளை வழங்கும் நிகழ்வு இன்று நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையில் ஜனாதிபதி இதனைக் குறிப்பிட்டுள்ளார்.    (மு)

 

 

One comment

  1. நாட்டுக்கு கிடைத்த ஒரு தோஷம் இது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>