ஆயுதங்கள் குறித்த தகவல் வழங்கியவருக்கு 50 லட்சம் ரூபா சன்மானம்- பொலிஸ்


police spokman

தேசிய தவ்ஹீத் ஜமாத் பயங்கரவாத குழுவின் சம்மாந்துறை பிரதேசத்தில் நடாத்தப்பட்டு வந்த ஆயுத களஞ்சியசாலைகள் இரண்டு தொடர்பில் பொலிஸாருக்கு தகவல் வழங்கிய நபருக்கு 50 லட்சம் ரூபா சன்மானத்தை வழங்க பதில் பொலிஸ் மா அதிபர் சந்தன விக்ரமரத்ன இன்று (23) அனுமதி வழங்கியுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது.

இவர் வழங்கிய தகவலின் மூலம் பாரியளவிலான வெடிபொருட்கள், குண்டு தயாரிக்க பயன்படுத்தும் இரும்பு பொருட்கள், இரசாயனப் பொருட்கள் என்பன மீட்கப்பட்டுள்ளன.

தான் வழங்கிய தகவல்களினால் நாட்டில் இடம்பெறவிருந்த பாரிய சேதம் தடுக்கப்பட்டதாகவும், இருப்பினும், இதனை யாரும் கண்டுகொள்ளவில்லையென தொலைக்காட்சி செய்திச் சேவைக்கு வழங்கிய குறித்த நபருடைய கருத்துக்களை வைத்து, இந்த சன்மானத்தை அவருக்கு வழங்க பதில் பொலிஸ் மா அதிபர் நடவடிக்கை எடுத்துள்ளார்.   (மு)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>