கடந்த போட்டியில் சட்ட மீறல்: பங்களாதேஷ் அணிக்கு ஐ.சி.சி. தண்டனை விதிப்பு


18Bangladesh

இலங்கை மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கிடையில் இடம்பெற்ற முதலாவது ஒருநாள் சர்வதேச கிரிக்கெட் போட்டியில் சர்வதேச கிரிக்கெட் சட்டத்தை மீறியதற்காக ஐ.சி.சி. தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது.

கடந்த 26 ஆம் திகதி கொழும்பு ஆர்.பிரேமதாச விளையாட்டு மைதானத்தில் நடைபெற்ற போட்டியில் குறிப்பிட்ட நேரத்திற்குள் 50 ஓவர்களை வீசி முடிக்காமை குறித்தே இத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, பங்களாதேஷ் அணியின் தலைவர் தமீம் இக்பாலுக்கான போட்டிக் கொடுப்பனவில் 40 வீதத்தையும், ஏனைய வீரர்கள் ஒவ்வொருவரிடமிருந்தும் தலா 20 வீதமும் தண்டப் பணமாக அறவிட ஐ.சி.சி. தீர்மானித்துள்ளது.

இலங்கை – பங்களாதேஷ் அணிகளுக்கிடையிலான இரண்டாவது சர்வதேச ஒருநாள் போட்டி இன்று (28) பிற்பகல் 2.30 மணிக்கு கொழும்பு ஆர்.பிரேமதாச சர்வதேச விளையாட்டு மைதானத்தில் இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.   (மு)

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>