உள்நாட்டு பாம் எண்ணெய் தொழிற்துறைக்கு பாரிய பாதிப்பு – தோட்டத்துரைமார் சங்கம் எச்சரிக்கை


Head Table

நாற்று நெருக்கடிக்கு 3 மாதங்களில் தீர்வு வழங்கப்படவில்லை எனின் உள்நாட்டு பாம்
எண்ணெய் தொழிற்துறைக்கு மீளமுடியாத பாதிப்பு ஏற்படும் என தோட்டத்துரைமார் சங்கம் எச்சரிக்கை

பாம் எண்ணெய் உற்பத்தி மற்றும் மீள் நடுகை தொடர்பில் நடைமுறையில் காணப்படும் தடைகளுக்கு 3 மாதங்களில் உறுதியான தீர்வு எட்டப்படவில்லை எனில் 500 மில்லியன் பெறுமதியான நாற்றுக்கன்றுகள் பயிரிடமுடியாமல் ஏற்படும் நெருக்கடியால் தொழிற்துறைக்கு மோசமான மற்றும் மீளமுடியாத பாதிப்பு ஏற்படும் என இலங்கை பெருந்தோட்டதுரைமார் சங்கம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

அண்மையில் கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இது தொடர்பில் கருத்து தெரிவித்த பெருந்தோட்டதுரைமார் சங்கத்தின் தலைவர் சுனில் பொஹொலியத்த, பாம் எண்ணெய் உற்பத்தி மற்றும் மீள் நடுகை தொடர்பில் அரசுக்கு தெளிவான நிலைப்பாடு ஒன்று இல்லாமை காரணமாக இலங்கையின் அதிக இலாபகரமான பெருந்தோட்ட பயிரொன்று பாதிப்புக்குள்ளாகியுள்ளதாக சுட்டிக்காட்டினார்.

இலங்கையில் முதலாவது பாம் எண்ணெய் உற்பத்தி இற்றைக்கு 50 வருடங்களுக்கு முன்னர் ஆரம்பானது, அதாவது தோட்டங்கள் தனியார் மயப்படுத்தப்பட முன்னராகும். அதனை தொடர்ந்து பல தசாப்தங்களாக அது படிப்படியாக பரவலாகி வந்தது. உண்மையிலேயே, பெருந்தோட்டத்துறையின் தொடர்ந்தேர்ச்சியான வளர்ச்சி மற்றும் முன்னேற்றத்துக்கு பயிர்களில் பல்வகைத்தன்மை ஏற்படுத்த வேண்டும் என்பது அனைத்து தரப்பினரும் ஏற்றுக்கொண்ட விடயமாகும்.

இவை அனைத்தும் படிப்படியாக, கட்டமைக்கப்பட்ட மற்றும் நிபந்தனைகளுக்கு உட்பட்டு அண்மைய காலம் வரை நடைமுறைப்படுத்தப்பட்டு வந்தாலும் துரதிஷ்டவசமாக கடந்த நான்கு வருடங்களாக பெருந்தோட்டத்துறை தொடர்பில் செயற்பட்ட கொள்கைகள் விஞ்ஞான மற்றும் பொருளாதார தரவுகளிலிருந்து விலகி அரசியல் ரீதியானதாக செயற்பட்டமை பல்வேறு சிக்கல்களுக்கு காரணமாகியுள்ளது. அதனால் நாம் பெருந்தோட்டத்துரைமார் சங்கம் என்ற வகையில் பாம் எண்ணெய் பயிரிடுதல் தொடர்பில் காணப்படும் தடைகளை நீக்கி மீண்டும் அந்த விதைகளை பயிரிட தேவையான பின்னணியை ஏற்படுத்துவதற்கு தேவையான நிலையான மற்றும் தீர்மானமிக்க செயற்பாடொன்றை ஏற்படுத்துமாறு கொள்கைவகுப்பாளர்களிடம் கேட்டுக்கொள்கிறோம் என தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்ததாவது;

எதிர்வரும் 3 மாதங்களில் இந்த நெருக்கடி தொடர்பில் அரசுக்கு சரியான தீர்வொன்றுக்கு வர முடியாமல் போனால் இலங்கை பெருந்தோட்டத்துரைமார் சங்கத்துக்கு நேரடியாக 500 மில்லியன் ரூபாய் பாரிய நஷ்டம்
ஏற்படும் என குறிப்பிட்டார். அதேபோன்று தற்போதைய பாம் எண்ணெய் பயிர்கள் காலம் செல்லச்செல்ல விளைச்சல் குறையும் எனவும், மீண்டும் பயிரிடவில்லை எனின் பாம் எண்ணெய் பயிர்கள் உள்ளிட்ட ஒட்டுமொத்த பெருந்தோட்டத்துறையும் பாதிப்புக்கு உள்ளாகும் என தெரிவித்தார்.

பாம் எண்ணெய்யில் காணப்படும் பாரிய பொருளாதார சாத்தியக்கூறுகள் மற்றும் சமையல் எண்ணெய் இறக்குமதியால் ஏற்படும் 30 பில்லியன் ரூபாய் செலவை குறைத்துக்கொள்ளவும், 9,538 ஹெக்டயார் முதல் 20,000 ஹெக்டயார் வரை பாம் எண்ணெய் பயிரை பரவல் படுத்தும் முன்பு காணப்பட்ட தேசிய இலக்கு தொடர்பில் கருத்து தெரிவித்த வாட்டவள தோட்ட நிறுவனத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரி பினேஷ் பணன்வல இவ்வாறு தெரிவித்தார்.

தற்பொழுது இலங்கையில் 220,000 மெட்ரிக் டொன் சமையல் எண்ணெய் இறக்குமதி செய்யப்படுவதுடன் தேசிய ரீதியில் 19,740 மெட்ரிக் டொன் பாம் எண்ணெய்யும் 48,805 மெட்ரிக் டொன் தேங்காய் எண்ணெய்யும் உற்பத்தி செய்யப்படுகின்றது. இந்த தரவுகளின்படி இலக்கை எண்ணெய் இறக்குமதியில் நிகர இறக்குமதியாளர் என்பதுடன் நாம் எண்ணெய் ஏற்றுமதிசெய்யும் அளவுக்கு இல்லை என்பது புலப்படுகின்றது. ஏனென்றால் நாம் உற்பத்தி செய்யும் மொத்த எண்ணெய்யும் தேசிய உள்ளூர் கேள்விக்கு தேவைப்படுவதோடு அவ்வாறில்லை எனின் எண்ணெய் இறக்குமதிக்கு பாரிய நிதி வெளிநாட்டுக்கு எடுத்துச்செல்லப்படுகின்றது.

அதேபோன்று பாம் எண்ணெய் உற்பத்தியானது உலகில் மிகவும் செயற்பாடு மிக்க பெருந்தோட்ட பயிர் என்பதுடன் அது ஹெக்டயார் ஒன்றுக்கு தென்னையை விட நான்கு மடங்கு விளைச்சல் தருவதுடன் ஏனைய எண்ணெய் உற்பத்தி பயிர்களுடன் ஒப்பிடும்போது அதிக விளைச்சல் தருகின்றது இதன்படி நோக்கும் போது வீட்டுத்துறைக்கு தேவையான எண்ணெய் கேள்வியை நிரப்புவதற்கு நாம் 100,000 ஹெக்டயார் தென்னை உற்பத்தி செய்ய வேண்டும் என்பதுடன் அது தர்க்கரீதியற்ற விடயமாகும். அதற்கு பதிலாக பாம் எண்ணெய் 20,000 ஹெக்டயார் மாத்திரமே பயிரிடவேண்டியுள்ளது. தற்பொழுது இது தொடர்பில் பல விடயங்கள் எழுப்பப்பட்டாலும் பாம் எண்ணெய் எமக்கு ஒரு புதிய பயிரல்ல.

அது கடந்த 50 வருட காலமாக நாகியாதெனிய தோட்டத்தில் பயிரிடப்பட்டுள்ளதுடன் இதுவரை அது தொடர்பில் எந்தவித சிக்கல்களும் ஏற்பட்டதில்லை. விஷேடமாக எந்தவித எதிர்மறையான சூழலியல் தாக்கமும் இல்லாத உயர்ந்த பொருளாதார நலன்களை பெற்றுத்தரும் இந்த பயிர் தொடர்பில் காணப்படும் தடையை நீக்கி தேவையான நடவடிக்கையை எடுக்குமாறு கொள்கைவகுப்பாளர்களிடன் கேட்டுக்கொள்கிறோம் என பினேஷ் பணன்வல தெரிவித்தார்.

ஊடகவியலாளர் சந்திப்பின் இறுதியாக பாம் எண்ணெய் பயிர் தொடர்பில் காணப்படும் பிழையான கருத்துக்களை தெளிவுபடுத்தும் நோக்கில் விஞ்ஞான ரீதியான விளக்கமொன்றை வழங்கிய இலங்கை வயம்ப பல்கலைக்கழக விவசாய மற்றும் பெருந்தோட்ட முகாமைத்துவ பீடத்தின் பேராசிரியர் அஷோக நுகவெல இவ்வாறு குறிப்பிட்டார்.

பாம் எண்ணெய் தொடர்பில் காணப்படும் தவறான கருத்துக்களில் பிரதான இரண்டு குற்றச்சாட்டுகளாக நிலக்கீழ் நீர் இல்லாமல் போதல், மற்றும் அதிகமாக நீர் மற்றும் உரம் தேவைப்படுகின்றது என்பதாகும். இதற்கு சிறந்த உதாரணமாக மலேசியாவை குறிப்பிடலாம். மலேசியாவில் 100 வருடங்களுக்கு மேலாக பாம் எண்ணெய் பயிரிடல் பெருமளவில் இடம்பெற்று வருவதோடு இதுவரை அவர்களுக்கு அவ்வாறான எந்தவித சிக்கலும் ஏற்பட்டதில்லை. அதேபோன்று அங்கு காணப்படும் மற்றுமொரு விஷேட விடயம், மலேசியாவில் அதிகமாக பாம் எண்ணெய் பயிரிடும் பகுதியிலிருந்து சிங்கப்பூருக்கு நீர் ஏற்றுமதி செய்யப்படுகின்றது. அவ்வாறு இருந்தபோதிலும் அந்த பகுதியில் மழைவீழ்ச்சியானது நாம் பாம் எண்ணெய் பயிரிடும் ஈரமண்டல வலய மலை வீழ்ச்சியைவிடவும் குறைந்ததாகும்.

அதேபோன்று பாம் எண்ணெய் பயிர்ச்செய்கை தொடர்பான அனைத்து அறிக்கைகளும் தேவையானவர்கள் பரிசீலனை செய்துகொள்ள முடியுமான வகையில் திறந்து காணப்படுவதுடன் பாம் எண்ணெய் பயிரினால் ஏற்படும் சூழலியல் தாக்கம் ஏனைய வணிக பயிரினால் ஏற்படும் தாக்கத்துக்கு சமனானது என அந்த அறிக்கைகளை ஆராயும் போது நோக்கக்கூடியதாக உள்ளது. எனினும் இந்த அறிக்கைகள் தொடர்பில் கொள்கைவகுப்பாளர்கள் மற்றும் அரச சார்பற்ற நிறுவனங்களான அழுத்த குழுக்கள் எந்தவித கரிசனையும் கொள்வதில்லை, மாறாக அவர்களது கருத்தை மாத்திரம் வெளிப்படுத்த முற்படுகின்றனர்.

இந்த அத்தியாவசிய பயிர் தொடர்பில் பிரதேச தோட்ட சங்கங்கள் அதிக முதலீடு செய்து மிகவும் ஆபத்தான நிலையில் காணப்படுவதோடு பயிரிடுவதற்கு தேவையான அனைத்து அனுமதிகளையும் பெற்றுள்ளதோடு தென்னை ஆராய்ச்சி நிலையம் மற்றும் பயிர் தொற்றுநோய் பிரிவினால் குறித்த தோட்டங்களில் எந்தவித நோய் நிலைமைகளும் இல்லை என உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இவ்வாறான நிலையில் எந்தவித நியாயமான காரணமும் இன்றி ஏற்படுத்தப்பட்டுள்ள தடையினால் பயிரிடுவோர் ஆபத்தான நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். விஷேடமாக எதிர்வரும் 3 மாதங்களில் கொள்கை வகுப்பாளர்கள் இது தொடர்பில் சாதகமான தீர்வொன்றை எடுக்காவிட்டால் ஏற்படும் பாரிய நட்டம் காரணமாக இலங்கையின் பொருளாதாரத்துக்கும் பாரிய தாக்கம் ஏற்படுவது சந்தேகமில்லை, என பேராசிரியர் நுகவெல குறிப்பிட்டார்.

இதேவேளை, எதிர்வரும் 3 மாதங்களில் பயிரிடும் நடவடிக்கைகளை ஆரம்பிக்க முடியாமல் போனால் அவர்களுக்கு ஏற்படும் 500 மில்லியன் ரூபாய் நட்டம் தொடர்பில் சட்ட நடவடிக்கை எடுப்பதற்கு பெருந்தோட்டத்துரைமார் சங்கம் மற்றும் அதன் அங்கத்தவர்கள் கவனம் செலுத்தி

வருவதாக சங்கத்தின் தலைவர் சுனில் பொஹொலியத்த தெரிவித்தார். “பெருந்தோட்டத்துறை அமைச்சு மற்றும் ஜனாதிபதி இணைப்பு அதிகாரி இது தொடர்பில் பொருத்தமான நடவடிக்கையொன்றை எடுப்பதாக உத்தரவாதம் அளித்துள்ளதால் நாம் இது வரை அவ்வாறான ஒரு நடவடிக்கை தொடர்பில் கவனம் செலுத்தவில்லை. எவ்வாறாயினும் நாம் இன்னும் அரசாங்கம் மீது நம்பிக்கை வைத்துள்ளதோடு துரத்திஷ்டவசமாக அது இரண்டு வருடங்களை விட தாமதமாகியுள்ளது. எனினும் இனிமேலும் இந்த தாமதத்தை எம்மால் தாங்கிக்கொள்ள முடியாது என்பதை சுட்டிக்காட்ட விரும்புகிறோம்.” என குறிப்பிட்டார்.
Burned Oil palm seedlings 2

Image (1)

Image (4)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>