இலங்கை வாழ் முஸ்லிம்களுக்கு 12 ஆம் திகதி ஹஜ்ஜுப் பெருநாள்


hajj

இலங்கை வாழ் முஸ்லிம்களுக்கு புனித ஹஜ் பெருநாள் எதிர்வரும் 12 ஆம் திகதி என கொழும்பு பெரிய பள்ளிவாயல் இன்று அறிவித்துள்ளது.

துல்ஹஜ் மாதத்திற்கான தலைப்பிறையைத் தீர்மானிக்கும் மாநாடு இன்று (02) மஃரிப் தொழுகையைத் தொடர்ந்து கொழும்பு பெரிய பள்ளிவாயலில் இடம்பெற்றது. நாட்டின் பல பாகங்களிலும் துல்ஹஜ் தலைப்பிறை தென்பட்டுள்ளதனால், துல்கஃதா மாதத்தை 29 ஆக நிறைவு செய்வதாகவும் பிறைக் குழுக் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, இலங்கை முஸ்லிம்களுக்கு புனித அரபா தினம் 11 ஆம் திகதி அமையவுள்ளதாகவும் பிறைக் குழு மேலும் தெரிவித்துள்ளது.  (மு)

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>