நியூஸிலாந்துக்கு எதிரான இலங்கை டெஸ்ட் குழாம் அறிவிப்பு


D3S4256x-640x240

நியூஸிலாந்து அணிக்கு எதிரான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடருக்கான இலங்கை அணி அறிவிக்கப்பட்டுள்ளது.

திமுத் கருணாரத்ன தலைமையிலான இந்த அணியில் முன்னாள் டெஸ்ட் அனித் தலைவர் தினேஷ் சந்திமால் இணைத்துக்கொள்ளப்பட்டுள்ளார்.

அதேவேளை டெஸ்ட் போட்டியின் போது சட்டவிரோதமான பந்துவீச்சு என ICC இனால் சோதனைக்கு உட்படுத்தப்பட்டிருந்த சுழற்பந்து வீச்சாளர் அகில தனஞ்சயவும் இந்த டெஸ்ட் குழாமில் இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இலங்கை மற்றும் நியூஸிலாந்து அணிகளுக்கிடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி இம்மாதம் 14ம் திகதி காலி சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் ஆரம்பமாகவுள்ளமை குறிப்பிடத்தக்கது.(அ)
EBW8kOpXkAEdS8K

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>