
இலங்கை கிரிக்கெட் அணியின் இடைக்கால தலைமை பயிற்றுவிப்பாளராக இலங்கை அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் ருமேஸ் ரத்நாயக்க நியமிப்பட்டுள்ளார்.
இரண்டு டெஸ்ட் போட்டிகளில் மோதவுள்ள இலங்கை மற்றும் நியூஸிலாந்து அணிகளுக்கு இடையிலான முதலாவது போட்டி எதிர்வரும் 14 ஆம் திகதி காலி சர்வதேச விளையாட்டு மைதானத்தில் ஆரம்பமாகவுள்ளமை குறிப்பிடத்தக்கது. (மு)