பஸ்யால கலல்பிட்டிய பகுதியில் வாகன விபத்து, 3 பேர் பலி


road-accident (1)

கொழும்பு – கண்டி பிரதான வீதியிலுள்ள பஸ்யால கலல்பிட்டிய பிரதேசத்தில் தனியார் பஸ்ஸொன்றும் வேன் ஒன்றும் நேருக்கு நேர் மோதிக் கொண்டதில் மூவர் பலியாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கண்டி நோக்கிப் பயணித்துக் கொண்டிருந்த தனியார் பஸ்ஸொன்றும் கொழும்பு நோக்கி பயணித்த வேன் ஒன்றும் நேருக்கு நேர் மோதிக் கொண்டதனால் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.

பலியாகியுள்ள மூவரும் திருகோணமலையைச் சேர்ந்தவர்கள் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இவ்விபத்தில் வேனில் பயணித்த சாரதி உட்பட இரு பெண்களும் ஆண் ஒருவரும் கடுமையான காயங்களுடன் வத்துப்பிட்டிவல வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் சாரதியும், இரு பெண்களும் உயிரிழந்துள்ளதாகவும் குறிப்பிடப்படுகின்றது.   (மு)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>