இந்தியாவுக்கு எதிராக பாகிஸ்தானின் ஐந்து அதிரடித் தீர்மானங்கள்


india paki

இந்திய நிர்வாகத்திக் கீழ் உள்ள காஷ்மீர் தொடர்பில் இந்தியா எடுத்துள்ள தீர்மானத்துக்கு எதிர்ப்பைத் தெரிவிக்கும் வகையில் பாகிஸ்தான் கடுமையான ஐந்து முடிவுகளை எடுத்துள்ளது.

காஷ்மீரின் சிறப்புரிமைகளை பறிக்கவும், அந்த மாநிலத்தை இரண்டு யூனியன் பிரதேசங்களாகப் பிரிக்கவும் இந்தியா முடிவெடுத்துள்ளது.

இதன்படி, பாகிஸ்தானுக்கான இந்தியத் தூதுவரை நாட்டிலிருந்து வெறியேற்றுவதுடன், இந்தியத் தலைநகர் டெல்லியில் உள்ள தமது தூதுவரையும்  திரும்ப அழைக்கவும் பாகிஸ்தான் நடவடிக்கை எடுத்துள்ளது.

இந்தியாவில் கடந்த சில நாட்களாக நடைபெற்றுவந்த காஷ்மீர் தொடர்பான நிகழ்வுகளைத் தொடர்ந்து, பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் தலைமையில் அந்நாட்டின் தேசிய பாதுகாப்புக் குழு இன்று (07) கூடியுள்ளது.

இந்தியா தன்னிச்சையாக , சட்ட விரோதமாக எடுத்த முடிவால் எழுந்துள்ள நிலைமை, இந்திய நிர்வாகத்திலுள்ள ஜம்மு காஷ்மீர் மற்றும் எல்லை கட்டுப்பாட்டு பகுதியின் நிலைமை பற்றி இந்த கூட்டத்தில் விவாதிக்கப்பட்டதாக என்று பாகிஸ்தான் கூறியுள்ளது.

அந்தக் கூட்டத்தில் இந்தியாவுக்கு எதிராக மிக முக்கியமான 5 முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன.

1. இந்தியாவோடு இருக்கும் தூதரக உறவுகளை குறைப்பது.

2. இந்தியாவுடன் இருதரப்பு வர்த்தகத்தை துண்டிப்பது.

3. இருதரப்பு உறவு ஏற்பாடுகளை மீளாய்வு செய்வது.

4. பாதுகாப்பு கவுன்சில் உட்பட ஐக்கிய நாடுகள் அவைக்கு இந்த பிரச்சனையை எடுத்துச் செல்வது

5. பாகிஸ்தானின் சுதந்திர நாளான ஆகஸ்ட் 14 ஐ காஷ்மீர் மக்களின் வீரத்திற்கும், சுயாட்சி உரிமைக்கான அவர்களின் நியாயமான போராட்டத்திற்குமான ஆதரவைத் தெரிவிக்கும் நாளாகக் கடைபிடிப்பது எனவும், இந்திய சுதந்திர தினமான ஆகஸ்ட் 15-ஐ கறுப்பு நாளாக கடைபிடிப்பது எனவும் இக்கூட்டத்தில் தீர்மானங்கள் எடுக்கப்பட்டுள்ளன.   (மு)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>