
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவுக்கு கட்சியின் தலைமைத்துவத்தை வழங்குவதற்காக எதிர்வரும் 11 ஆம் திகதி நடாத்தப்படவுள்ள ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் மாநாட்டில் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் 16 பேர் கொண்ட குழுவிலிருந்து 15 பேர் கலந்துகொள்ள தீர்மானித்துள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.பீ. திஸாநாயக்க தெரிவித்தார்.
கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு இதனைக் கூறினார்.
இந்தக் கூட்டத்துக்கு பாராளுமன்றத்திலுள்ள எதிர்க் கட்சியைச் சேர்ந்த சகலருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. யாரும் தனக்கு கிடைக்கவில்லையெனக் கூற முடியாது எனவும் அவர் குறிப்பிட்டார்.
நல்லாட்சி அரசாங்கத்திலிருந்து ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியைச் சேர்ந்த 16 பேர் பிரிந்து சென்று எதிர்க் கட்சியில் அமர்ந்து கொண்டனர். அதில், தயாசிறி ஜயசேகர தற்பொழுது ஒதுங்கிச் செயற்படுகின்றார். இவர் தவிர்ந்த 15 பேரே இக்கூட்டத்தில் கலந்துகொள்ள
இருப்பினும், 11 ஆம் திகதி நடைபெறும் பொதுஜன பெரமுனவின் மாநாட்டில் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி கலந்துகொள்ள மாட்டாது என அதன் பொதுச் செயலாளர் தயாசிறி ஜயசேகர எம்.பி. தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது. (மு)
இவன் இப்படிதான்.குரங்கு போல
இப்ப மட்டும் என்னவாம்?உங்கள் தலைவர் உட்பட அணைவருமே அங்கிருந்து வந்தவர்கள்தானே…
This is a surprise
already u and other members are in pohottuwa
U think people’s are fool