உலகிற்கு தேரவாத பௌத்தத்தை வழங்க கம்போஜியாவுடன் இணைந்து நடவடிக்கை- ஜனாதிபதி


image_acae409a48

தேரவாத பௌத்த தர்மத்தை உலகிற்கு பரப்பும் தர்மபோதனை நிகழ்ச்சித் திட்டமொன்றை முன்னெடுப்பதற்கு இலங்கையும் கம்போஜியாவும் இணைந்து செயற்பட வேண்டியுள்ளது என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கம்போஜியாவில் தெரிவித்துள்ளார்.

கம்போஜியாவில் தலைநகரில் அமைந்துள்ள வட்லங்கா விகாரையில் நடைபெற்ற சமய நிகழ்வில் கலந்துகொண்டு நேற்று (10) உரையாற்றுகையில் இதனைக் கூறியுள்ளார்.

ஜனாதிபதியின் கம்போஜிய விஜயத்தில் ஜாதிக ஹெல உறுமயவின் தலைவரும், தென் மாகாண சங்க சபையின் தலைவருமான கலாநிதி ஓமல்பே சோபித்த தேரரும் கலந்துகொண்டுள்ளார்.

இலங்கை கம்போஜியாவுக்கு இடையில் தொடர்பை ஏற்படுத்தும் வகையில் கம்போஜியாவில் இலங்கை தூதரகம் ஒன்றை ஏற்படுத்தவுள்ளதாகவும் ஜனாதிபதி மேமுலும் கூறியுள்ளார். (மு)

image_acae409a48

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>