இந்தியாவின் பல மாநிலங்கள் வெள்ளத்தினால் பாதிப்பு, 134 பேர் பலி


v

இந்தியாவின் பல பிராந்தியங்களில் பெய்து வரும் அடை மழையினால் கேரளா, மராட்டியம், கர்நாடாகா,குஜராத் ஆகிய மாநிலங்கள் பாரிய பாதிப்புக்குள்ளாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதன்படி, கேரளாவில் ஏற்பட்டுள்ள வெள்ளம் மற்றும் மண்சரிவு என்பவற்றால் 57 இற்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளனர். 1.66 லட்சம்  தங்கள் இருப்பிடத்தை விட்டு, பாதுகாப்பான இடங்களுக்குச் சென்றுள்ளனர்.

கர்நாடகாவில் 30 பேர் பலியாகியுள்ளனர். மரட்டியம், குஜராத் மாநிலங்களிலும் கடுமையான வெள்ள பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

மராட்டியத்தில் பெய்து வரும் பலத்த மழையினால் இவ்வாரத்தில் மட்டும் 28 பேர் உயிரிழந்துள்ளனர். இதேபோல், குஜராத்தில் மட்டும் மழையினால் 19 பேர் உயிரிழந்துள்ளனர்.  (மு)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>