பொதுஜன பெரமுன கூட்டத்துக்கு முன்னர், அமெரிக்க விசேட தூதுவர் மஹிந்த ராஜபக்ஸவுடன் சந்திப்பு


mahind

அமெரிக்க இராஜாங்க திணைக்களத்தின் ஊடகம் மற்றும் தெற்கு ஆசியா என்பவற்றுக்குப் பொறுப்பான உதவிச் செயலாளர் அலிஸ் வெல்ஸ் இன்று (11) காலை எதிர்க் கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஸவைச் சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.

மஹிந்த ராஜபக்ஸவின் விஜேராம இல்லத்தில் வைத்து இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது.

உதவிச் செயலாளர் அலிஸ் உத்தியோகபுர்வ விஜயமொன்றை மேற்கொண்டு இலங்கை வந்துள்ளார். இதன் ஓர் அங்கமாகவே இன்றைய சந்திப்பு இடம்பெற்றுள்ளது.

அத்துடன், பொதுஜன பெரமுனவின் இன்றைய பொதுக் கூட்டத்தில் ஜனாதிபதி வேட்பாளர் அறிவிக்கப்படவுள்ள நிலையில் இவருடனான சந்திப்பு முக்கியத்துவம் மிக்கதாக அமையும் என தெரிவிக்கப்படுகின்றது.

அமெரிக்கப் பிரஜாவுரிமை பெற்றிருந்த கோட்டாபய ராஜபக்ஸ இன்று பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளராக அறிவிக்கப்படவுள்ளதாக மஹிந்த அணியிலுள்ள பாராளுமன்ற உறுப்பினர்கள் பலரும் ஹேஸ்யம் கூறி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.   (மு)

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>