பொதுஜன பெரமுனவின் கூட்டத்தில் கலந்துகொண்டவர்களுக்கு எதிராக ஒழுக்காற்று விசாரணை


slfp-logo

ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியிலிருந்து பொதுஜன பெரமுனவுக்குச் சென்றுள்ள அத்தனை பேருடையவும் பாராளுமன்ற உறுப்புரிமையை எடுத்து ஸ்ரீ ல.சு. கட்சியிலுள்ள ஏனையவர்களுக்கு வழங்க நடவடிக்கை எடுக்கப் போவதாக ஸ்ரீ ல.சு.கட்சியின் பொதுச் செயலாளர் தயாசிறி ஜயசேகர தெரிவித்தார்.

இன்று (11) ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் தொகுதிக் கூட்டமொன்றில் உரையாற்றுகையில் அவர் இதனைக் கூறினார்.

கட்சியொன்றைக் கட்டியெழுப்புவதற்கு ஒழுக்கம் முக்கியமானது. ஒரு கட்சியில் பாராளுமன்றத்தில் உறுப்புரிமையைப் பெற்றுக் கொண்டு இன்னுமொரு கட்சிக்கு செயற்படுவதை ஏற்றுக் கொள்ள முடியாது. அவ்வாறு செயற்படுபவர்களுக்கு ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்க வேண்டும்.

குமார வெல்கம பாராளுமன்ற உறுப்பினர் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் சமய நிகழ்வொன்றில் கலந்துகொண்டமைக்காக பொதுஜன பெரமுனவின் அமைப்பாளர் பதவியிலிருந்து நீக்கப்பட்டார். இன்று பொதுஜன பெரமுனவின் கூட்டத்தில் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி உறுப்பினர்கள் கலந்துகொண்டதுபோல், பொதுஜன பெரமுனவின் உறுப்பினர்கள் யாராவது ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் கூட்டத்தில் கலந்துகொண்டால் என்ன நடந்திருக்கும் எனவும் அவர் மேலும் கூறினார்.    (மு)

9 comments

  1. Kilichcha?! ithanai thaan pothujana peramunavin angurapana nigalvukku sendrawargalukku appothu sonninga

  2. Kilichcha?! ithanai thaan pothujana peramunavin angurapana nigalvukku sendrawargalukku appothu sonninga

  3. Kilichcha?! ithanai thaan pothujana peramunavin angurapana nigalvukku sendrawargalukku appothu sonninga

  4. அப்படி போடு அருவாள

  5. கேட்டு கேட்டு புளித்துப்போன சமாச்சாரம்! கட்சியிலே இருந்துகொண்டு வேறொரு கட்சியை உருவாக்கி தாய் கட்சியை தாரை வார்த்த தானைத் தலைவனை ஒரு வார்த்தை கேட்க துப்பில்லை! இந்த அசிங்கம் போதாதென்று ஒழுக்காற்று விசாரண எடுத்து மூக்குடைபட வேண்டுமா என்ன?

  6. Most of the mps are opportunist in slfp.My3 ellaruma sernthu peeya tinnungada…👿

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>