பதுளையில் சஜித்தின் ஜனாதிபதி பிரச்சாரக் கூட்டமா? – கட்சிக்குள் சர்ச்சை


Sajith premadasa

பதுளைக்கு இன்று (12) சஜித் பிரேமதாச செல்வது ஜனாதிபதித் தேர்தல் பிரச்சாரத்துக்காகவா அல்லது வீடமைப்புத் திட்டத்தை திறந்து வைப்பதற்காகவா என கட்சிக்குள் சர்ச்சையொன்று ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

சஜித் வருகிறார் (சஜித் எனவா) என போஸ்டர்களுடன் பதுளையில் பெரிய கூட்டமொன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளமையே இந்த சர்ச்சைக்குக் காரணம் எனக் கூறப்படுகின்றது.

இது குறித்து அமைச்சர் ஹரீன் பெர்னாண்டோவிடம் வினவப்பட்ட போது,

மக்கள் அவர் ஜனாதிபதியாவது குறித்து பேசிக் கொள்கின்றார்கள். எனக்கு அது குறித்து எதுவும் தெரியாது. சஜித் பிரேமதாச பதுளைக்கு வருவதாக கூறப்பட்டது. எமது பிரதேசத்துக்கு வருபவரை வரவேற்பது எனது பொறுப்பாகும் எனவும் அவர் கூறியுள்ளார்.

இது குறித்து அமைச்சர் சாகல ரத்னாயக்க கருத்துத் தெரிவிக்கையில்,

நான் அறிந்த வரையில், எனக்கும் அழைப்பொன்று வந்தது. பதுளையில் வீடமைப்பு திட்டமொன்றைத் திறந்து வைக்க சஜித் பிரேமதாச வருவதாக கூறப்பட்டது. சஜித் பிரேமதாச எந்த வீடமைப்புத் திட்டத்தை திறந்து வைப்பதாக இருந்தாலும் எனக்கு அழைப்புவிடுப்பது வழக்கமாகும் எனவும் அமைச்சர் சாகல ரத்னாநயக்க குறிப்பிட்டுள்ளார்.   (மு)

 

 

 

 

 

 

2 comments

  1. ஜனாதிபதி பிரச்சாரக்கூட்டமேதான்….

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>