மாகாண சபைத் தேர்தலுக்கு உயர் நீதிமன்றத்திடம் விளக்கம் கோரி மனு


Maithiri 01

எல்லை நிர்ணய அறிக்கை முன்வைக்கப்பட்டில்லாத சந்தர்ப்பத்தில் மாகாண சபைத் தேர்தலை நடாத்த இடம்பாடு உள்ளதா என்பது குறித்து சட்ட விளக்கம் கோரி ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் முன்வைக்கப்பட்ட மனு குறித்த விவாதம் எதிர்வரும் 23 ஆம் திகதி காலை 10.00 மணிக்கு உயர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ளது.

இது தொடர்பான உயர் நீதிமன்றத்தின் தீர்மானம் எதிர்வரும் 30 ஆம் திகதிக்கு முன்னர் ஜனாதிபதிக்கு வழங்கப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

ஜனாதிபதியின் இந்த மனுவுடன் தொடர்புடைய எழுத்து மூல சட்ட விடயங்கள் காணப்படுவதாயின் அதனை எதிர்வரும் 21 ஆம் திகதிக்கு முன்னர் ஒப்படைக்குமாறு உயர் நீதிமன்றத்தினால் இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்திடம் கோரப்பட்டுள்ளது.

பழைய முறைமையின் கீழ் மாகாண சபைத் தேர்தலை நடாத்துவதற்கான இடம்பாடுகள் உள்ளதா என ஜனாதிபதி இந்த மனுவில் நீதிமன்றத்தைக் கோரியுள்ளதாகவும் கூறப்படுகின்றது. (மு)

 

 

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>