கட்டுப்படாத தலைமுறையைத் தவிர்க்க சிறு வயது முதல் சமயக் கல்வி அவசியம்- பிரதமர்


Ranil

சிறுவயது முதலே சமய, ஆன்மீக கல்வி அபிவிருத்தியில் மாணவர்களை செலுத்துவதன் ஊடாக அடிப்படைவாத மற்றும் கட்டுப்படாத தலைமுறைகள் உருவாவதைத் தடுக்க முடியும் எனவும், இதனால், ஒவ்வொரு சமயத்தவரும் தத்தமது சமயத்திற்கு ஏற்ப சிறுவர்களுக்கு சமயக் கல்வியை வழங்க நடவடிக்கை எடுப்பது முக்கியமானது என பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணத்தில் இந்து சமய போதகர்களை சந்தித்த போது கருத்துத் தெரிவிக்கையிலேயே பிரதமர் இதனைக் கூறியுள்ளார்.

வடக்கிலுள்ள யுத்தத்தினால் சிதைவடைந்த கோயில்களை புனரமைக்க தேவையான நிதியை அடுத்த வரவு செலவுத் திட்டத்தில் ஒதுக்கவுள்ளதாகவும் பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.

தற்போது காணப்படும் சகல சமயஸ்தலங்களையும் அபிவிருத்தி செய்வதற்கான நிதியை அரசாங்கம் வழங்கி வருவதாகவும் பிரதமர் சுட்டிக்காட்டியுள்ளார்.

மக்களின் தேவையைக் கருத்தில் கொண்டு புதிய சமயஸ்லங்களை அமைப்பதற்கும் அரசாங்கம் நடவடிக்கை எடுக்கும். இதனைச் சாட்டாக வைத்துக் கொண்டு எந்தச் சந்தர்ப்பத்திலும் பலவந்தமாகவோ, தேவையற்ற வகையிலோ புதிதாக சமயஸ்தானங்களை அமைக்க அரசாங்கம் ஒருபோதும் அனுசரணை வழங்காது எனவும் பிரதமர் மேலும் கூறியுள்ளார்.   (மு)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>