ரணிலுக்காக கரு ஜயசூரிய தனது பதவியை இழப்பார் – லக்ஸ்மன் யாபா ஹேஸ்யம்


Lakshman Yapa Abewardan

ரணில் விக்ரமசிங்கவுடன் டாம் இழுக்கவும் முடியாது, சதுரங்க விளையாட்டில் ஈடுபடவும் முடியாது, வேறு விளையாட்டுக்கள் விளையாடவும் முடியாது என மஹிந்த ஆதரவு குழு பாராளுமன்ற உறுப்பினர் லக்ஸ்மன் யாபா அபேவர்தன தெரிவித்தார்.

ரணில் விக்ரமசிங்கவின் தலைமைத்துவத்தைப் பாதுகாப்பதற்காக கூட்டணி அமைக்கப்பட்டவுடன்  சபாநாயகர் பதவியிலிருந்து கருஜயசூரிய இராஜினாமா செய்து ஜனாதிபதி வேட்பாளராக களமிறங்குவார் எனவும் யாபா குறிப்பிட்டார்.

ரணில் விக்ரமசிங்க ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையை யாருக்கும் கொடுக்க மாட்டார். இதனால், இக்கட்சியின் ஜனாதிபதி வேட்பாளராக வருபவர் ரணில் விக்ரமசிங்கவின் கட்சியின் தலைமைத்துவத்தைப் பாதுகாக்கும் ஒருவராகவே இருப்பார் எனவும் அவர் மேலும் கூறினார்.    (மு)

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>