SLFP – SLPP தீர்மானமிக்க கலந்துரையாடல் இவ்வாரம்


-slfp_slpp_l

ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி மற்றும் ஸ்ரீலங்கா பொதுஜன பெறமுண கட்சிகளுக்கிடையிலான தீர்மானமிக்க கலந்துரையாடலொன்று இவ்வாரம் இடம்பெறும் என பாராளுமன்ற உறுப்பினர் டலஸ் அலஹப்பெரும தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன மற்றும் எதிர்க்கட்சி தலைவர் மஹிந்த ராஜபக்ஷ ஆகியோருக்கிடையில் இந்த கலந்துரையாடல் இடம்பெறும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

குறித்த கலந்துரையாடலில் எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில் அதிக கவனம் செலுத்தப்படவுள்ளது.

அதேவேளை எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தல் தினம் அறிவிக்கப்பட முன்னர் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் புதிய கூட்டணி அறிவிக்கப்படும் என பாராளுமன்ற உறுப்பினர் டலஸ் அலஹப்பெரும தெரிவித்துள்ளார்.

கூட்டணியின் பெயர் விரைவில் உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.(அ)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>