“The Crown and The Robe” மற்றும் “Hajara Counts Her Blessings” நூல் வெளியீட்டு விழா


IMG-20190822-WA0000

எழுத்தாளரும் உளவளத்துனையாளருமான நப்லா சலாஹுதீன் எழுதிய “The Crown and The Robe” மற்றும் “Hajara Counts Her Blessings” ஆகிய இரு நூல்களின் வெளியீட்டு விழா இம்மாதம் சனிக்கிழமை (31) பி.ப. 4.00 மணிக்குக் கண்டி கிங்ஸ்வூட் கல்லூரிக்கு எதிரே அமைந்துள்ள ரோயல் கெண்டியன் மண்டபத்தில் நடைபெறவுள்ளது.

இவ்வைபவத்தில் பிரதம அதிதியாக உளவியலாளர் மெளலவி அப்துல் ஹமீத், ஊக்குவிப்பு பேச்சாளர் பாசிர் மொகிடீன் உள்ளிட்ட பல முக்கியஸ்தர்களும் கலந்து கொண்டு உரையாற்றவுள்ளனர்.

சிறு வயதிலிருந்தே குழந்தைகளுக்கு இஸ்லாமியக் கதைகளைப் படிக்கவும் மதிப்பிடவும் பழக்கப்பட வேண்டியதன் முக்கியத்துவத்தை வலியுறுத்தி நான்கு தொடக்கம் ஒன்பது வரையான வயதுடைய சிறுவர்களை மையமாகக் கொண்டு எழுதப்பட்டுள்ள “The Crown and The Robe” நூலானது சிறுவயதில் ஞாபக சக்தி அதிகம் காணப்படுவதால் புனித அல்குர்ஆனை மனனமிட ஊக்குவிக்கும் வண்ணம் வடிவமைக்கப்பட்டுள்ளது

அதனுடன் இணைந்ததாக வெளியிடப்படவுள்ள “Hajara Counts Her Blessings” எனும் நூலானது ஐந்து முதல் பன்னிரெண்டு வயது வரையான பிள்ளைகளை இலக்காகக் கொண்டு எழுதப்பட்டுள்ளதுடன், இது வறுமையை எடுத்துக்காட்டி மற்றையவர்களுக்கு உதவி செய்வதன் முக்கியத்துவத்தை எடுத்துக் காட்டுவதாகவும் எழுதப்பட்டுள்ளதுடன் பிள்ளைகளுக்கு எவ்விதம் வழிகாட்டுதல் வேண்டும் என்பதை பெற்றோர்களுக்கா உணர்த்தக்கூடிய வகையிலும் எழுதப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

-ராபி சிஹாப்தீன்-

IMG-20190822-WA0000

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>