சஜித் ஜனாதிபதி வேட்பாளராவாரா? – ராஜித புதிய விளக்கம்


rajitha-senaratne

ஐக்கிய தேசியக் கட்சி தலைமையில் கூட்டணி அமைப்பதற்கான வரைபு பங்காளிக் கட்சிகளால் ஏகமனதாக ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளதாகவும், கொள்கைத் தீர்மானத்தை அடிப்படையாகக் கொண்டே கூட்டணியின் வேட்பாளர் யார் என்பது தீர்மானிக்கப்படும் எனவும் சுகாதார அமைச்சர் ராஜித சேனாரட்ண தெரிவித்துள்ளார்.

விரைவில் கூட்டணிக்கான ஒப்பந்தம் கைச்சாத்திடப்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அலரி மாளிகையில் நேற்று(28) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அமைச்சர் ராஜித சேனாரட்ன இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

கூட்டணியின் தலைவராக ஐ.தே.கவின் தலைவர் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க செயற்படுவார். ஐ.தே.கவினால் பரிந்துரைக்கப்பட்டு தலைமைத்துவ சபையினால் அங்கீகரிக்கப்படும் நபர் கூட்டணியின் செயலாளராக நியமிக்கப்படுவார். கூட்டணியின் செயலகம் சுதந்திரமான ஒரு இடமாக இருப்பதுடன் இதனை தலைமைத்துவ சபை தீர்மானிக்கும்.

தொகுதி அமைப்பாளர்களாக ஐ.தே.க. அமைப்பாளர்கள் செயற்படுவார்கள். பலவீனமான தொகுதிகளில் கூட்டணியின் சார்பில் அமைப்பாளர்களை நியமிப்பதற்கு இணக்கப்பாடு எட்டப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் மேலும் கூறியுள்ளார்.  (மு)

 

 

2 comments

  1. இவர் ஒருதடவை ரணிலை தோற்கடிக்கவும்,ஒருமுறை வெற்றிக்காகவும் உழைத்தார்.தற்போது தனதும் மகனினதும் அரசியல் இருப்புக்காக உழைக்கிறிர்.சஜித்நம்பகூடாது இந்த கூட்டத்தை.

  2. சஜித் இல்லாட்டி UNP out

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>