ஐக்கிய தேசிய கட்சிக்குள் எந்தப் பிரச்சினையும் இல்லை – கபீர்


1527827379-Kabeer

ஐக்கிய தேசிய கட்சிக்குள் எந்தவிதமான பிரச்சினையும் இல்லை என கட்சியின் தவிசாளரும் நெடுஞ்சாலைகள், வீதி அபிவிருத்தி மற்றும் பெற்றோலிய வளங்கள் அபிவிருத்தி அமைச்சருமான கபீர் ஹஷீம் தெரிவித்துள்ளார்.

நேற்று கட்சித் தலைமையகமான சிறிகொத்தவில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொண்ட போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

அதிகாமானவர்கள் ஊடகங்களில் வெவ்வேறு கருத்துக்களை வெளியீடுவதாகவும் தமது எதிராளிகள் இத்தகைய நடவடிக்கைகளை மேற்கொள்வதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

ஐக்கிய தேசிய கட்சி ஒற்றுமையாகவும் ஜனநாயக முறையிலும் தீர்மானம் மேற்கொள்ளும் கட்சி என தெரிவித்த அமைச்சர் கபீர் ஹஷீம், கட்சி தலைமையகத்தில் தேர்தல் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

கட்சியின் நடவடிக்கைகள் தொடர்பில் பொதுச் செயலாளருடன் இணைந்து கலந்துரையாடப்பட்டு வருவதாகவும் இன்னும் சில தினங்களில் பிரதமருடன் இடம்பெறும் சந்திப்பில் ஐக்கிய தேசிய கட்சியின் எதிர்வரும் தேர்தல் நடவடிக்கை தொடர்பில் கலந்துரையாடப்பட்டு அதனை பொதுமக்களுக்கு அறிவிக்க எதிர்பார்ப்பதாகவும் அமைச்சர் கபீர் ஹஷீம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.(அ)

6 comments

  1. ஏன் ரணில் சஜித் மோதல் என்ன தெரியாதோ!?

  2. NIEE HORU ISLAMIYANEHA HANE POI SULLURINGHEHA

  3. கோபால் எவ்வளவு அடிச்சாலும் விசுவாசமாக இருப்பேன் கோபால் நம்புங்க கோபாலனே

  4. Don’t be a joker Mr.Kaber

  5. Boruwa ubalata prasna nehey paksikayata ubalage set eka prasnayak buruwo

  6. Boruwa ubalata prasna nehey paksikayata ubalage set eka prasnayak buruwo

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>