ரணில், கருவின் ஆதரவுடன் பதவிக்கு வருவதே எனது எதிர்பார்ப்பு- சஜித்


sajith-premadasa-2

திருட்டு, கொள்ளை போன்ற செயல்களுடன் தான் தொடர்புபட்டவன் அல்லவெனவும்,   கொலைகாரர்களுக்கோ போதைப் பொருள் வியாபாரிகளுக்கோ தான் பாதுகாப்பு வழங்கியவனும் அல்லன் எனவும் அமைச்சர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

இன்றைய தினம் குருணாகலையில் ஏற்பாடு செய்யப்பட்ட பொதுக் கூட்டம் எவருக்கும் எதிரானது அல்லவெனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

தனது எதிர்பார்ப்பு பிரதமர் ரணில் விக்ரமசிங்க, சபாநாயகர் கரு ஜயசூரிய மற்றும் ஐக்கிய தேசியக் கட்சியின் அனைவரதும் ஆசிர்வாதத்துடன் நாட்டை கட்டியெழுப்பும் பொறுப்புக்கு வருவதாகும் எனவும் அவர் மேலும் கூறியுள்ளார்.

இன்று மாலை குருணாகலையில் இடம்பெற்ற பேரணியில் உரையாற்றும் போதே அவர் இதனைக் கூறியுள்ளார்.   (மு)

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>