புரிந்துணர்வு ஏற்பட்டுள்ளது- கோட்டாவுடனான சந்திப்பின் பின் தயாசிறி கருத்து


dayasiri

தனது கட்சிக்கும் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவுக்கும் இடையிலுள்ள பிரச்சினைகள் குறித்து இரு கட்சிகளுக்கும் சிறந்த புரிந்துணர்வு ஏற்பட்டுள்ளதாக ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளர் தயாசிறி ஜயசேகர தெரிவித்தார்.

இன்று (06) இடம்பெற்ற 8 ஆவது சுற்றுப் பேச்சுவாரத்தை மற்றும் கோட்டாபய ராஜபக்ஸவுடனான பேச்சுவார்த்தை என்பவற்றின் பின்னர் ஊடகங்களிடம் கருத்துத் தெரிவிக்கையிலேயெ இதனைக் கூறினார்.

இரு கட்சிகளும் இணைந்து போட்டியிடுவதற்கே கடின முயற்சிகள் முன்னெடுக்கப்படுகின்றன. இதுவரையில் நடைபெற்ற பேச்சுவார்த்தைகளின் பின்னர் இரு கட்சிகளும் சில விட்டுக் கொடுப்புக்களை மேற்கொள்ள வேண்டியுள்ளதாகவும் அவர் மேலும் சுட்டிக்காட்டினார்.

இன்று இடம்பெறுகின்ற கலந்துரையாடலில் ஶ்ரீலங்கா சுதந்திர கட்சி சார்ப்பில் தயாசிறி ஜயசேகர, மஹிந்த அமரவீர மற்றும் லசந்த அழகியவன்ன ஆகியோர் கலந்து கொண்டதுடன்,  ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி சார்ப்பில் பசில் ராஜபக்ஷ, பேராசிரியர் ஜீ.எல் பீரிஸ் மற்றும் டலஸ் அலஹப்பெரும ஆகியோரும் கலந்து கொண்டுள்ளனர்.    (மு)

 

 

5 comments

  1. Shameless buggers

  2. நாளுக்கு நாள் முரண்பட்ட கருத்து சொல்றான். எனவே இவன் என்னமோ கேம் ஆடுறான் என்பது தெளிவான உண்மை. 2014 நவம்பரில் சுதந்திர கட்சி பொதுத் செயலாளர் மைத்திரிபால போல், தற்போதைய பொதுச் செயலாளரான தயாசிறி 2019 ஒக்டோபரில் பாய்வான் போல 😆

  3. நாளக்கி வேறு மாதிரி வரும்.

  4. இவர்கள் நேர்ந்துவிட்ட ஆடு மாடுகளை போலவே இருகிறார்கள். பாவம் ஒரு ஆண்டுக்குள் அத்தனை பேரையும் பிரித்து மேய்ந்து வீசப்படும்.

  5. Kulappu Thantrege Gunarathna

    Papatharayo.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>