சஜித்துக்கு முதுகெலும்புள்ளதா? – மஹிந்த ராஜபக்ஸ கேள்வி


mahinda

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க தனக்கு முதுகெலும்புள்ளது என்பதை நிரூபித்துள்ளதாகவும் முடியுமானால் சஜித் பிரேமதாசவும் நிரூபிக்கட்டும் எனவும் எதிர்க் கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஸ தெரிவித்தார்.

அவிசாவலையில் இன்று (07) தினேஸ் குணவர்தனவின் கட்சியினால் ஏற்பாடு செய்த கோட்டாபய ஆதரவுக் கூட்டத்தில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையில் அவர் இதனைக் கூறினார்.

ரணில் விக்ரமசிங்க இன்று தான் ஜனாதிபதி வேட்பாளராக வருவதாக அறிவித்துள்ளார். அவருக்கு அந்த பலம் இருக்கின்றது. சஜித் பிரேமதாசவும் முடியுமானால் இவ்வாறு அறிவிக்கட்டும்.

அவர் இவ்வாறு அறிவிப்பாரா? அல்லது ரணில் விக்ரமசிங்கவுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டதன் பின்னர் பிரதமர் பதவியை தருவதாக கூறியவுடன் ரணிலின் வலையில் விழுவாரா? எனவும் பொறுத்திருந்து பார்ப்போம்.

எமக்கு தனியாக வந்தாலும் சரி, சேர்ந்து வந்தாலும் சரி ஒரு பொருட்டல்ல. வெற்றி பெறுவது நிச்சயம் எனவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.   (மு)

12 comments

  1. இதுகள் எல்லாம் ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள் பாமர மக்களின் தேவைகளை நிறைவேற்ற நாட்டின் முன்னேற்றம் பற்றி சிந்தித்து செயல்பட வேண்டிய யாரும் இல்லை

  2. இதுகள் எல்லாம் ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள் பாமர மக்களின் தேவைகளை நிறைவேற்ற நாட்டின் முன்னேற்றம் பற்றி சிந்தித்து செயல்பட வேண்டிய யாரும் இல்லை

  3. முதுகெலும்பு உள்ளவன் unp யிலே இல்லையே
    ..😂😂😂😂😂😂

  4. ரணிலின் கையிலிருந்து பிடுங்குவதனாலேயே ஏனய கட்சிகளின் மொத்த எண்ணங்களை நிறைவேற்றி ஐ தே க துண்டாக்கி சின்னதாய் ஒழிந்திருக்கும் இனவாதத்தையும் பகிரங்கமாய் கக்கலாம் அதற்கு சில நயவஞ்சகர்கள் முயற்சிசெய்வதுபோல் நம்மிலும் சிலர்( பாம்பு எல்லமே விசம்தான் ஆனாலும் நாகபாம்பிடம் கடிவாங்குவதைவிட தண்ணிப்பாம்பிடம் பட்டுக்கொள்லாம்)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>