“அருகிலுள்ள பாடசாலை சிறந்த பாடசாலை” வேலைத்திட்டத்தின் கீழ் கட்டிடம் திறப்பு


20190909_094145

“அருகிலுள்ள பாடசாலை சிறந்த பாடசாலை” வேலைத்திட்டத்தின் கீழ் நிர்மாணிக்கப்பட்ட பாடசாலை கட்டடங்கள் மாணவர்களிடம் கையளிக்கும் நிகழ்வின் அங்கமாக கல்முனை அல் மிஸ்பாஹ் மகா வித்தியாலத்தில் கல்வி அமைச்சினால் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட “ஆரம்ப கற்றல் வள நிலைய ” கட்டிடம் திறப்பு விழா இன்று நேற்று (09) பாடசாலையின் பிரதி அதிபர்.ஐ. எல்.எம். ஜின்னா தலைமையில் இடம்பெற்றது.

இந் நிகழ்வில் பிரதம விருந்தினராக முன்னாள் இராஜாங்க அமைச்சரும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பிரதி தலைவருமான எச் .எம்.எம்.ஹரீஸ் கலந்து கொண்டார்

மேலும் கெளரவ அதிதியாக கல்முனை வலயக்கல்விப் பணிப்பாளர் எம்.எஸ்.அப்துல் ஜலில் அவர்களும் விசேட அதிதிகளாக கல்முனை மாநகர சபை உறுப்பினர்காளான ஏ.எம்.ரோஷன் அக்தர்,ஏ.எம்.பைரூஸ்,
ஏ.சி.ஏ.சத்தார்,எம்.எஸ்.எம்.நிசார், ஆகியோரும் மற்றும் கல்முனை வலய கல்வி பணிமனை அதிகாரிகள், பாடசாலையின் பிரதிஅதிபர்கள் ,ஆசிரியர்கள் ,மாணவர்கள் , பாடசாலை நலன்விரும்பிகள் அனைவரும் கலந்து கொண்டனர்.

குறித்த நிகழ்வில் அன்மையில் விசேட கல்விப் பிரிவு மாணவர்களுக்கான மாகாண மட்ட விளையாட்டுப் போட்டியில் தேசிய ரீதியான போட்டிக்கு தெரிவு செய்யப்பட்ட மாணவர்கள் அதிதிகளினால் கெளரவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.(அ)

-எம்.என்.எம்.அப்ராஸ்-

IMG-20190909-WA0012

IMG-20190909-WA0023

IMG-20190909-WA0024

IMG-20190909-WA0060

IMG-20190909-WA0024 (1)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>