பாகிஸ்தான்- சீன கூட்டு அறிக்கைக்கு இந்தியா எதிர்ப்பு


flags of Pakistan and India painted on cracked wall

பாகிஸ்தானும் சீனாவும் காஷ்மீர் தொடர்பில் கூட்டாக வெளியிட்டுள்ள அறிக்கையை முற்றாக நிராகரிப்பதாக இந்தியா அறிவித்துள்ளது.

இந்திய வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர் ரவீஸ்குமார் இதனைக் கூறியுள்ளார்.

சீன வெளிவிவகார அமைச்சர் அண்மையில் பாகிஸ்தான் சென்றபோது பாகிஸ்தானும், சீனாவும் காஷ்மீர் தொடர்பில் கூட்டாக ஒர் அறிக்கை வெளியிட்டிருந்தன. இந்த அறிக்கையையே தாம் நிராகரிக்கிறோம் என இந்தியா தெரிவித்துள்ளது.

‘சீனா பாகிஸ்தான் பொருளாதார பாதை’ என்ற பெயரிலான ஒரு திட்டத்தை அந்த நாடுகள் அறிவித்துள்ளன. இதில் இந்திய எல்லையிலுள்ள பாகிஸ்தானின் பிரதேசங்கள் உள்ளடங்கியுள்ளதாக இந்தியா குற்றம்சாட்டியுள்ளது.

இந்த உடன்படிக்கையை இரு நாடுகளும் கைவிட வேண்டும் எனவும் இந்தியா கோரியுள்ளது.  (மு)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>