ஆப்கானிலுள்ள அமெரிக்க தூதரகம் நோக்கி ஏவுகணைத் தாக்குதல்


201909110752031919_Blast-at-US-Embassy-in-Kabul-on-911-anniversary_SECVPF

ஆப்கானிஸ்தானிலுள்ள அமெரிக்க தூதரகத்தை நோக்கி நேற்று நள்ளிரவு ஏவுகணைத் தாக்குதல் ஒன்று மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் இதில், எவருக்கும் காயம் ஏற்பட வில்லையெனவும் தெரிவிக்கப்படுகின்றது.

அமெரிக்காவின் மீதான செப்டம்பர் 11   தாக்குதலின் நினைவு தினம் இன்று நினைவுகூரப்படும் நிலையில் இத்தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டப்படுகின்றது.

தூதரக வளாகம் அமைந்துள்ள பகுதியில் இருந்து கரும்புகை வெளியேறும் காட்சிகள் உள்ளூர் ஊடகங்களில் வெளியாகியுள்ளதாகவும், அப்பகுதியில் நேட்டோ படைகள் உட்பட பாதுகாப்பு படையினர் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளாகவும் கூறப்படுகின்றது.

ஆப்கானிஸ்தான் அதிகாரிகள் இந்த தாக்குதல் பற்றி எந்த கருத்தும் வெளியிடவில்லை.

அமெரிக்கா – தாலிபான்கள் இடையேயான பேச்சுவார்த்தையை ரத்து செய்வதாக அமெரிக்க ஜனாதிபதி டொனாட் டிரம்ப் அண்மையில் அறிவித்திருந்தார். இந்த அறிவிப்புக்கு பிறகு, ஆப்கானிஸ்தானில் நடக்கும் முதல் தாக்குதல் இதுவாகும் எனவும் சுட்டிக்காட்டப்படுகின்றது.   (மு)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>