வென்னப்புவ பிரதேச சபை உறுப்பினருக்கும், சகோதரிக்கும் தொடர்ந்தும் விளக்கமறியல்


image_40a529a068

வென்னப்புவ பிரதேச சபையின் ஐக்கிய தேசிய கட்சி உறுப்பினர் துலக்ஷி பெர்னாண்டோ மற்றும் அவரது சகோதரி துலாஞ்சலி பெர்னாண்டோ ஆகியோரை தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

குறித்த இருவரையும் எதிர்வரும் 16ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு மாரவில மாவட்ட மேலதிக நீதவான் தேம்யசிறி பெரேரா உத்தரவிட்டுளார்.

பொலிஸ் அதிகாரிகளை திட்டி அவர்களின் கடமைகளுக்கு இடையூறு விளைவித்த குற்றச்சாட்டில் வென்னப்புவ பிரதேச சபையின் ஐக்கிய தேசிய கட்சி உறுப்பினர் துலக்ஷி பெர்னாண்டோ மற்றும் அவரது சகோதரி துலாஞ்சலி பெர்னாண்டோ ஆகியோர் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.(அ)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>