அக்குறணை பிரதேச சபை உறுப்பினராக நிரன்ஜன் கருனாரத்ன


IMG-20190911-WA0016

அக்குறணை பிரதேச சபையில் ஏற்பட்ட ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதேச சபை உறுப்பினர் பதவி வெற்றிடத்திற்கு முன்னாள் பிரதேச சபை உறுப்பினர் நிரன்ஜன் கருனாரத்ன பிரதேச சபை உறுப்பினராக மீண்டும் தபால், தபால் சேவைகள், முஸ்லிம் சமய கலாச்சார அமைச்சர் எம்.எச்.ஏ.ஹலீம் முன்னிலையில் அண்மையில் சத்தியப் பிரமாணம் செய்து கொண்டார்.

கடந்த மே மாதம் அக்குறணை பிரதேச சபை ஐக்கிய தேசியக் கட்சி உறுப்பினராக இருந்த நாராயணசாமி ஜெயசீலனின் மறைவின் மூலம் ஏற்பட்ட பதவி வெற்றிடத்திற்கே இவர் நியமிக்கப்பட்டுள்ளார்

இவர் தனது கன்னி உரையை நேற்று (10) அக்குறணை பிரதேச சபையின் தவிசாளர் ஐ.எம்.இஸ்திஹார் தலைமையில் நடைபெற்ற அக்குறணை பிரதேச சபையின் மாதாந்த பொதுச் சபை கூட்டத்தில் நிகழ்த்தினார் என்பதுடன் பிரதேச சபையை அங்கம் வகிக்கும் அனைத்து கட்சி உறுப்பினர்களும் அவருக்கு வாழ்த்துகளை தெரிவித்து உரையாற்றினர்.

மாத்தளை புனித தோமஸ் கல்லூரியின் பழைய மாணவரான இவர் நிமல் கருனாரத்ன மற்றும் நில்மினி தம்பதிகளின புதல்வருமாவார்.(அ)

-ராபி சிஹாப்தீன்-
IMG-20190911-WA0010

IMG_20190910_231614

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>