கோத்தாபயவின் மேன்முறையீடு நிராகரிப்பு


1564032185-Supreme-Court-stays-Special-HC-s-trial-against-Gotabaya-L

முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தாபய ராஜபக்ஷவினால் முன்வைக்கப்பட்டிருந்த மேன்முறையீட்டு மனு உயர்நீதிமன்றத்தின் ஐவரடங்கிய நீதிபதிகள் குழுவினால் நிராகரிக்கப்பட்டுள்ளது.

டீ.ஏ ராஜபக்ஷ அருங்காட்சியக அமைப்பின் போது இடம்பெற்ற நிதி மோசடி தொடர்பில் கோத்தாபய ராஜபக்ஷவுக்கு எதிராக விசேட மேல் நீதிமன்றத்தில் தொடரப்பட்டிருக்கும் வழக்கு விசாரணைகளுக்கு எதிராக முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தாபய ராஜபக்ஷ உயர்நீதிமன்றத்தில் மேன்முறையீடு செய்திருந்தார்.

குறித்த மேன்முறையீடே இவ்வாறு நிராகரிக்கப்பட்டுள்ளதுடன் குறித்த வழக்கு எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 15ம் திகதி முதல் தொடர்ச்சியாக ஒவ்வொரு தினமும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.(அ)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>