கிங்ஸ்பெரி தற்கொலை குண்டுதாரியின் சடலத்தை அடக்கம் செய்ய உத்தரவு


maxresdefault (1)

கொழும்பு கிங்ஸ்பெரி ஹோட்டலில் தற்கொலை குண்டுத்தாக்குதல் மேற்கொண்ட அசாம் மொஹமட் முபாரக் என்பவரின் சடலத்தை பொரள்ளை மயானத்தில் அடக்கம் செய்யுமாறு கொழும்பு கோட்டை நீதவான் ரங்க திசாநாயக்க இன்று உத்தரவிட்டுள்ளார்.

குறித்த சடலத்தை அடக்கம் செய்வதற்காக திம்பிரிகஸ்யாய பிரதேச செயலாளரிடம் ஒப்படைக்குமாறு கொழும்பு பிரதான நீதிமன்ற வைத்தியருக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

குறித்த தற்கொலை குண்டுதாரியின் சடலம் தொடர்பான விசாரணைகள் நிறைவடைந்துள்ளதாக குற்றப்புலனாய்வு பிரிவினர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளனர்.

இதனையடுத்து சடலத்தை உறவினர்கள் ஏற்க மறுத்த நிலையில் நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.(அ)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>