ஜே.வி.பி. யுடன் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி கூட்டணி?


UNP and JVP joins maithri slfp

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவுடன் நடைபெறும் பேச்சுவார்த்தை தோல்வியடைந்தால் மேற்கொள்வதற்கு பல்வேறு மாற்று வழிகள் காணப்படுவதாக ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் அறிவித்துள்ளது.

ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி தனியாக வேட்பாளரை நியமிப்பதற்கு விண்ணப்பம் கையளித்துள்ளது. பல்வேறு கூட்டணிகள் காணப்படுகின்றன. மக்கள் விடுதலை முன்னணியுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு கூட்டணி அமைக்கவும் எம்மால் முடியும் எனவும் அக்கட்சியின் பொதுச் செயலாளர் தயாசிறி ஜயசேகர தெரிவித்தார்.

கொழும்பில் நேற்று (18) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையில் அவர் இதனைக் கூறினார்.

சுதந்திரக் கட்சியின் கிராமிய மட்டம் முதல் எம்.பிக்கள் வரையில் சகலருடையவும் எதிர்பார்ப்பு, ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவுடன் கூட்டணி அமைப்பதாயின் பொதுச் சின்னம் ஒன்றில் போட்டியிட வேண்டும் என்பது. இதனை எம்மால் விட்டுக் கொடுக்க முடியாது. அவ்வாறு விட்டுக் கொடுத்துவிட்டு மீண்டும் கட்சி உறுப்பினர்களை சந்திக்க முடியாமல் போகும் எனவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன தனது கட்சியின் சின்னத்துக்கு மக்களின் அங்கீகாரம் உள்ளதாகவும், உள்ளுராட்சி சபைத் தேர்தலில் இதனை நிரூபித்துள்ளதாகவும் தெரிவித்து வருகின்றது. இந்நிலையில், கட்சியின் சின்னத்தை மாற்றினால்தான் கூட்டணி என்றிருக்கும் ஸ்ரீ ல.சு.கட்சிக்கு பேச்சுவார்த்தையில் வெற்றிபெற முடியாது என்பது சாதாரணமாக புரியும் ஒன்றாகும்.

அத்துடன், ஐக்கிய தேசிக் கட்சியின் கொள்கையுடன் உடன்படாததன் விளைவாகவே, நல்லாட்சி அரசாங்கத்தை கலைக்க வேண்டிய நிலைமை ஏற்பட்டது. இந்த அனுபவத்துடன் ஐக்கிய தேசியக் கட்சியுடன் மீண்டும் கூட்டணி அமைப்பதென்பது சாத்தியமில்லாத ஒன்றாகும். வேறு வழியின்றி அவ்வாறான ஒரு தீர்மானத்துக்கு கட்சி வந்தாலும், மக்கள் மன்றத்தில் அதற்கு எதிர்ப்பு எழும் என்பது மட்டும் நிச்சயமானது.

இந்த நிலையில் ஸ்ரீ ல.சு.கட்சியின் பொதுச் செயலாளர் சொன்னது போன்று மக்கள் விடுதலை முன்னணியுடன் கூட்டுச் சேர்வதைத் தவிர வேறு வழியில்லை.

இதேவேளை, சஜித் பிரேமதாச ஐக்கிய தேசியக் கட்சியிலிருந்து வெளியேறி கூட்டணி அமைக்கலாம் என்ற எதிர்பார்ப்பும் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சிக்கு இருந்ததாக கூட்டு எதிரணி குற்றம்சாட்டி வந்தது. இதனாலேயே இறுதித் தருவாயிலில், பொதுஜன பெரமுனவுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ள நிலையில், தனித்துப் போட்டியிடுவதற்கான வேட்பாளர் விண்ணப்பத்தையும் தாக்கல் செய்துள்ளதாகவும் கூறப்பட்டது.

பொதுஜன பெரமுனவுடன் கூட்டணி அமைக்க முன்னெடுக்கப்பட்டு வரும் பேச்சுவார்த்தையை இழுத்தடிப்புச் செய்வதற்கு காரணம், சஜித்தின் தீர்மானம் வெளிவரும் வரையிலாகும் என்ற குற்றச்சாட்டும் பொதுஜன பெரமுனவுடன் உள்ள ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி எம்.பி.க்களினால் சுட்டிக்காட்டப்பட்டு வந்தது.

இப்போது, சஜித் பிரேமதாசவும் ஐக்கிய தேசியக் கட்சியிலிருந்து வெளியே வருவதாக தெரியவில்லை. இதற்கான எந்தவொரு சமிக்ஞையையும் இதுவரை பொது மேடைகளில் அவர் வெளியிடவில்லை. கட்சித் தலைமையின் மீது தனக்கு நம்பிக்கையிருப்பதாகவே அவர் கூறிவருகின்றார்.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் பொதுஜன பெரமுனவை குற்றம்சாட்டும் விதத்தில் கருத்துக்களை தெரிவித்து வருகின்றார். தாமரைக் கோபுரத்தின் திறப்பு விழாவில் கலந்துகொண்டு உரையாற்றுகையில், கடந்த அரசாங்கத்தில் இக்கோபுர நிர்மாணப் பணியில் 200 கோடி ரூபா மோசடி இடம்பெற்றுள்ளதாக ஜனாதிபதி சுட்டிக்காட்டியிருந்தார். இது தற்பொழுது அரசியல் அரங்கில் பேசு பொருளாக மாறியுள்ளது. எதிர்க் கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஸவும் இக்கருத்துக்கு எதிராக நேற்று (18) அறிக்கையொன்றை வெளியிட்டிருந்தார்.

அத்துடன், பொதுஜன பெரமுன உறுப்பினர்கள் அனைவரினதும் எதிர்ப்புக்கும் ஜனாதிபதியின் கருத்து மாறியுள்ளது. தேர்தல் நெருங்கும் போது ஜனாதிபதி பொதுஜன பெரமுனவுக்கு எதிராக கருத்துத் தெரிவிப்பதாகவும் ஜனாதிபதியின் இந்த அறிவிப்பு அரசியல் மட்டத்தில் சுட்டிக்காட்டப்படுகின்றது.

இப்படியான ஒரு சூழ்நிலையில், ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சிக்கு இலவு காத்த கிளி போன்ற நிலைமை ஏற்படுமா? என கட்சியின் மீது அக்கரையுள்ள பொது மக்களுக்கு அச்சம் இருக்கின்றது என்பது மட்டும் மறைந்துள்ள உண்மையாகும்.  (மு)

– முஹிடீன் இஸ்லாஹி

15 comments

  1. அதுக்கு யேன் யானை படம்?

  2. Aioo erunda oru option jvp mattum athaum mooditagala??????😱😱😱

  3. யாணை இல்லாத இடம் உருபடும்

  4. நடந்தால் நலமே! அதோடு ஐதேக அதிருப்தியாளர்களும் ஒன்று சேர்ந்து சிறுபான்மை இனத்தவரும் கைதூக்கிவிட்டால் இலங்கையின் அரசியல் வரலாறு படைக்கும்.

  5. யானைகளால் விவசாயம், மனிதர்கள் எல்லாவற்றுக்கும் எப்போதும் ஆபத்தும் நாசமுமேதான், அதே போல தான் யானைக் கட்சியின் மூலம் நாட்டுக்கும் மக்களுக்கும் சாபமே தான். மொத்தத்தில் எல்லா அரசியல் கட்சிகளும் ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள் தானே.

  6. Govinda Govindaa

  7. Then you don’t get many votes,

  8. Nalla mudiwu

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>