எமக்காக சின்னத்தையாவது மாற்ற முடியாதவர்களுடன் என்ன கூட்டணி- ஜனாதிபதி


Maithiri

எமக்கு கோட்டாபயவுக்கு வாக்களிக்க முடியும் எனவும், குறித்த சின்னத்தை மாற்றாத வரையில் அந்த கட்சிக்கு வாக்களிக்க முடியாது எனவும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.

குருணாகலையில் நடைபெற்ற கட்சியின் ஆதரவாளர்களுடனான கூட்டத்தில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையில் ஜனாதிபதி இதனைக் கூறினார்.

ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் மத்திய செயற்குழு, கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்கள், பிரதேச சபை உறுப்பினர்கள் மற்றும் கிராமிய மட்ட கட்சி உறுப்பினர்கள் ஆகியோரின் வேண்டுகோள் கூட்டணி அமைப்பதாயின் கட்சியின் சின்னத்தை மாற்ற வேண்டும் என்பதாகும்.

இதனை நான் நேற்று எதிர்க் கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஸ, ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஸ, பொதுஜன பெரமுன தேசிய அமைப்பாளர் பசில் ராஜபக்ஸ ஆகியோருடன் இடம்பெற்ற சந்திப்பின் போது எடுத்துக் கூறினேன். அவர்களுக்காக ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி நிறையவே செய்துள்ளது.

ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் தீர்மானத்தினால் தான் இன்று அவர்கள் பாராளுமன்ற உறுப்பினர்களாக இருக்கின்றனர். இவ்வளவும் செய்த சுதந்திரக் கட்சியுடன் கூட்டணி அமைக்க சின்னத்தை மாத்திரம் விட்டுக் கொடுக்க முடியாது எனின், இத்தகையவர்களுடன் கூட்டுச் சேர்வது எவ்வாறு எனவும் ஜனாதிபதி மேலும் கேள்வி எழுப்பினார்.   (மு)

4 comments

  1. எல்லா கூத்தும் கூடினா 60 நாளைக்கு தான்

  2. நல்ல முடிவு.
    ஊழல்வாதிகளுடனும்,முன்னாள் திருடர்களுடனும் என்ன கூட்டு வேண்டிக்கிடக்கு.

  3. நல்ல முடிவு.
    ஊழல்வாதிகளுடனும்,முன்னாள் திருடர்களுடனும் என்ன கூட்டு வேண்டிக்கிடக்கு.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>