முதலாவது ரி.20 போட்டி இலங்கை வசம்


pak

பாகிஸ்தானுக்கு எதிரான முதலாவது ரி. 20 போட்டியில் இலங்கை அணி 64 ஓட்டங்களால் வெற்றிபெற்றுள்ளது.

இன்று பாகிஸ்தானின் லாகூரில் நடைபெற்ற முதலாவது ரி. 20 போட்டியிலேயே இலங்கை வெற்றி பெற்றுள்ளது.

முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 20 ஓவர்கள் நிறைவில் 5 விக்கெட்டுகளை இழந்து 165 ஓட்டங்களைப் பெற்றிருந்தது.

பதிலுக்கு களமிறங்கிய பாகிஸ்தான் அணி 17. 4 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 101 ஓட்டங்களை மாத்திரமே பெற்றுக் கொண்டது.

இதையடுத்து மூன்று போட்டிகள் கொண்ட தொடரில் இலங்கை அணி 1 : 0 என முன்னிலையில் காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.   (மு)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>